போன வாரம் புடவையில், இந்த வாரம் பிகினியில்… | நட்டி, அருண் பாண்டியன் இணைந்து நடிக்கும் ரைட் | பிணமாக நடித்துள்ள காளி வெங்கட் : அது பெரிய பாக்கியம் என்கிறார் | விஷால் வீட்டில் 4வது காதல் திருமணம் | ‛சின்ன பாப்பா பெரிய பாப்பா' புகழ் இயக்குனர் எஸ்என் சக்திவேல் காலமானார் | 'அமரன்' வெற்றியைத் தக்க வைத்துக் கொள்வாரா 'மதராஸி' ? | ரிலீஸ் தேதி குழப்பத்தில் 'கருப்பு' : காத்திருக்கும் ரசிகர்கள் | பிளாஷ்பேக் : சூப்பர் ஸ்டாருக்கு பெயர் சூட்டிய சூப்பர் ஸ்டார் | பிளாஷ்பேக் : பாரதிராஜா இயக்கதில் நடிக்க மறுத்த சன்னி தியோல் | பாரிஜாதம் : புதிய தொடரில் ஆலியா மானசா |
ரஜினிகாந்த் - இயக்குனர் கார்த்திக் சுப்பராஜ் இணைந்த 'பேட்ட' படம் 2019 பொங்கலுக்கு வெளிவந்து வெற்றி பெற்றது. அதன் பிறகு சில இளம் இயக்குனர்களுடன் ரஜினி கூட்டணி அமைத்தாலும் மீண்டும் கார்த்திக் சுப்பராஜ் உடன் கூட்டணி அமைக்கவில்லை.
ரஜினி தற்போது 'வேட்டையன்' படத்தில் நடித்து முடித்துள்ளார். அடுத்து லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் 'கூலி' படத்தில் நடிக்க உள்ளார். விரைவில் அப்படத்தின் படப்பிடிப்பு ஆரம்பமாக உள்ளது. அது ரஜினியின் 171வது படமாக உருவாகப் போகிறது.
அதற்கடுத்து 'ஜெயிலர்' படத்தை இயக்கிய நெல்சன் திலீப்குமாருடன் 'ஜெயிலர்' படத்தில் இரண்டாம் பாகத்தில் ரஜினி நடிக்கலாம் என்ற தகவல் வெளியாகியது. இதனிடையே, கார்த்திக் சுப்பராஜ் சமீபத்தில் ரஜினியை சந்தித்து ஒரு கதையைச் சொன்னாராம். அந்தக் கதை ரஜினிக்கு பிடித்துவிட்டதாம். அதனால் அக்கூட்டணி மீண்டும் இணையும் என்கிறார்கள்.
அந்தப் படம் ரஜினி 172 ஆக உருவாகுமா அல்லது 173 ஆக உருவாகுமா என்பது விரைவில் தெரிய வரும். கார்த்திக் சுப்பராஜ் தற்போது சூர்யா நடித்து வரும் படத்தை இயக்கி வருகிறார். இப்படத்தின் வெளியீட்டிற்குப் பிறகு ரஜினி படத்திற்கு வருவார் என்று தகவல்.