வார் 2 : ஹிருத்திக் ரோஷன், ஜூனியர் என்டிஆர் இடையே நடன போட்டி? | போலீஸாக நடிக்கும் கவுதம் ராம் கார்த்திக் | கண்ணப்பா படத்திற்கு அடித்த ஜாக்பாட் | அஜித் படத்தை தயாரிக்கும் அஜித் ரசிகர் | டேட்டிங் ஆப் சிக்கல்களை பேசவரும் 'நீ பாரெவர்' | மலையாள இயக்குனர் மீது பாலியல் புகார்: நடிகை கைது | புராணப்படத்தில் நடிக்கும் சமுத்திரகனி | 'ஹரிஹர வீர மல்லு': அவுரங்கசீப் கேரக்டரை மாற்றிய இயக்குனர் | பிளாஷ்பேக்: 3டி படத்தில் நடிக்க மறுத்த ரஜினிகாந்த் | பிளாஷ்பேக்: பெரும் தோல்வி அடைந்த பிரம்மாண்ட படம் |
2024ம் ஆண்டில் அதிகம் எதிர்பார்க்கப்படும் பான் இந்தியா படமாக இருக்கும் படம் 'கல்கி 2898 ஏடி'. நாக் அஸ்வின் இயக்கத்தில் பிரபாஸ், தீபிகா படுகோனே, அமிதாப்பச்சன், கமல்ஹாசன் மற்றும் பலர் நடித்துள்ளனர்.
இப்படத்திற்கான முன்பதிவு அமெரிக்காவில் கடந்த வாரமே ஆரம்பமானது. சில நாட்களிலேயே ஒரு மில்லியன் அமெரிக்க யுஎஸ் டாலர் முன்பதிவின் மூலம் கிடைத்தது. குறைந்த நாட்களில் ஒரு மில்லியன் யுஎஸ் டாலர் முன்பதிவு என்ற புதிய சாதனையைப் படைத்தது. தற்போது இரண்டு மில்லியன் தொகைக்கு முன்பதிவு நடந்து முடிந்தது. படம் வெளியாக இன்னும் ஒன்பது நாட்கள் உள்ள நிலையில் இப்படி விறுவிறுப்பாக முன்பதிவு நடப்பது அமெரிக்க வினியோகஸ்தர்களை மகிழ்ச்சியில் ஆழ்த்தியுள்ளது.
படம் வெளியாக இன்னும் ஒன்பது நாட்கள் உள்ள நிலையில் படத்திற்கான புரமோஷன் பணிகள் சிறப்பாக இல்லை என பிரபாஸ் ரசிகர்கள் வருத்தப்பட்டுள்ளனர்.