பொங்கலுக்கு நடிகர் சங்க கட்டடம் திறப்பு : விஷால் திருமணம் எப்போது | பிக்பாஸில் வந்து விட்டால் மட்டும் நடிகையாகி விட முடியாது: தர்ஷிகா | ஹீரோயின் ஆனார் 'அரண்மனை' ஹர்ஷா | பிளாஷ்பேக் : சென்டிமெண்டில் அமலாவை கவிழ்த்த டி.ராஜேந்தர் | பிளாஷ்பேக்: 2 ஹீரோயின்கள் மோதிய 'மாங்கல்யம்' | சுற்றுலாவில் கீர்த்தி சுரேஷின் தலை தீபாவளி | காதலருடன் தீபாவளி கொண்டாடிய சமந்தா | ரூ.83 கோடி வசூலித்த ‛டியூட்' : 'ஹாட்ரிக்' 100 கோடியில் பிரதீப் ரங்கநாதன் | கர்நாடகாவில் 200 கோடி வசூல் சாதனையில் 'காந்தாரா சாப்டர் 1' | அடுத்த சிம்பொனி: இளையராஜா அறிவிப்பு |
நாக் அஷ்வின் இயக்கத்தில் பிரபாஸ், தீபிகா படுகோனே, அமிதாப்பச்சன், கமல்ஹாசன் மற்றும் பலர் நடிப்பில் உருவாகியுள்ள படம் 'கல்கி 2898 எடி'. இப்படம் ஜுன் 27ம் தேதி பான் இந்தியா படமாக வெளியாக உள்ளது. இப்படத்தின் வெளியீட்டிற்கு முந்தைய விழாவை ஆந்திர மாநிலத்தில் நடத்த உள்ளார்கள்.
ஆந்திராவின் தலைநகராக அமைய உள்ள அமராவதி நகரில் நடக்க உள்ள முதலாவது பிரம்மாண்டமான சினிமா விழாவாக இது இருக்கும். இந்த விழாவில் கலந்து கொள்ள ஆந்திர முதல்வர் சந்திரபாபு நாயுடு, தெலுங்கு நடிகர் சிரஞ்சீவி, நடிகர் ரஜினிகாந்த் ஆகியோர் கலந்து கொள்ள உள்ளார்கள் என்று தகவல் வெளியாகி உள்ளது.
படத்தில் நடிக்கும் நட்சத்திரங்கள் அனைவரும் கலந்து கொள்ள உள்ளதாகவும் தகவல். இந்த விழாவின் மூலம் இந்தப் படத்தை இந்திய அளவில் பேச வைக்க வேண்டும் என்ற எண்ணத்தில் பிரம்மாண்டமாக நடத்த உள்ளார்களாம். அதன்பின் சென்னை, மும்பை உள்ளிட்ட நகரங்களில் இந்தப் படத்திற்கான புரோமோஷன் நிகழ்ச்சிகள் நடக்க உள்ளதாம்.