இந்தாண்டு ஹிட் படமெல்லாம்... முதல் படத்தில் ஜெயித்த இயக்குனர்கள் | ராதிகா பாலிசியை மற்றவர்கள் பின்பற்றுவார்களா? | 10வது படத்திலும் புது இயக்குனரை அறிமுகப்படுத்தும் சிவகார்த்திகேயன் | மீண்டும் கதை நாயகனாக நடிக்கும் முனீஷ்காந்த் | 'கடல் கன்னி' ஆண்ட்ரியா | சமூக வலைதளத்தில் ஆபாச பதிவுகள்: லாவண்யா திரிபாதி போலீசில் புகார் | பிளாஷ்பேக்: தன் படத்தை பார்க்க விரும்பாத விஜயகாந்த் | பிளாஷ்பேக்: தமிழில் படமான உலக சினிமா | 'ஜனநாயகன்' ஓடிடி உரிமை ஒப்பந்தம் ரத்து? | அல்லு அர்ஜுன் பிறந்தநாளில் 'எஎ22 - எ6' பட டீசர் ? |

சுதா கொங்கரா இயக்கத்தில் சூர்யா, அபர்ணா பாலமுரளி, கருணாஸ், காளி வெங்கட் உள்ளிட்டோர் நடிப்பில் வெளியாகி வரவேற்பை பெற்ற திரைப்படம் 'சூரரைப்போற்று'. கேப்டன் ஜி.ஆர்.கோபிநாத்தின் வாழ்க்கை வரலாற்றை அடிப்படையாக வைத்து வெளியானது. இப்படம் தற்போது ஹிந்தியில் 'சர்பிரா' என்கிற பெயரில் ரீமேக் ஆகி உள்ளது. இதில் கதாநாயகனாக அக்ஷய் குமார் நடித்துள்ளார். அவருக்கு ஜோடியாக ராதிகா மதன் நடித்துள்ளார். ஜி.வி பிரகாஷ் இசையமைத்துள்ளார். படப்பிடிப்பு முடிந்து மற்ற பணிகள் நடைபெற்று வந்த நிலையில் இப்படத்தை வருகின்ற ஜூலை 12ம் தேதி அன்று திரைக்கு வருகிறது என புதிய போஸ்டர் உடன் அறிவித்துள்ளனர். இந்த படத்தில் சூர்யா சிறப்பு தோற்றத்தில் நடித்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.