'மாரீசன்' படம் ஜூலை 25ல் வெளியாகிறது | ராஜமவுலி படம் மூலம் இந்திய திரையுலகிற்கு திரும்புவது உற்சாகம் : பிரியங்கா சோப்ரா | 7500 தியேட்டர்களில் வெளியாகும் வார் 2 | கால வரையறையின்றி ஒத்திவைக்கப்பட்ட அனுஷ்காவின் ‛காட்டி' | ஹீரோவாகும் ‛டூரிஸ்ட் பேமிலி' இயக்குனர் அபிஷன் ஜீவிந்த் | வேள்பாரி நாவலில் ரஜினிகாந்த்? | பாராட்டுக்கள் கிடைத்தும் வசூலை அள்ளாத 'கண்ணப்பா' | 50வது நாளைக் கடந்த 'மாமன்', நன்றி தெரிவித்த சூரி | ஹரிஹர வீரமல்லு : யு டியூபில் மட்டும் 60 மில்லியன் பார்வைகள் | 'சப்தம்' படத்தை ஓடிடியில் வெளியிட நீதிமன்றம் தடை |
பிரபல நட்சத்திரங்களின் வாரிசுகள் நடிகர்களாக அறிமுகமாகும் வரிசையில் பாலிவுட் நடிகர் அமீர்கானின் மகன் ஜூனைத்தும் முதன்முறையாக மஹாராஜ் என்கிற படத்தின் மூலம் கதாநாயகனாக அறிமுகமாகியுள்ளார். பிரபல இயக்குனர் சித்தார்த் மல்ஹோத்ரா இயக்கியுள்ள இந்த படத்தை யஷ் ராஜ் பிலிம்ஸ் தயாரித்துள்ளது. அதே சமயம் பிரபல நடிகரின் மகன் நடிக்கும் முதல் படம் என்றால் எவ்வளவு ஆர்ப்பாட்டம் இருக்க வேண்டும் ? ஆனால் இந்த படமோ சில காரணங்களால் திரையரங்குகளில் வெளியாகாமல் நேரடியாக ஒடிடி தளத்திலேயே ஜூன் 14-ம் தேதி (நேற்று) ரிலீஸ் செய்ய திட்டமிடப்பட்டிருந்தது.
ஆனால் இந்த படம் ஹிந்து மதத்தை சேர்ந்தவர்களின் உணர்வுகளை புண்படுத்தும் விதமாக இருப்பதாகவும் படம் வெளியானால் வன்முறை ஏற்படும் சூழல் இருப்பதாகவும் கூறி இந்தப்படத்தை வெளியிட தடை விதிக்குமாறு கடவுள் கிருஷ்ணனின் பக்தர்கள் சார்பில் குஜராத் உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது. இதையடுத்து இந்த படத்தை வெளியிட நீதிமன்றம் தடை விதித்துள்ளதுடன் இதுகுறித்து ஓடிடி நிறுவனத்திற்கு நோட்டீஸ் அனுப்பி உள்ளது.