அண்ணாமலைக்கு பிடித்த ‛இட்லி கடை' | 'மகுடம்' படத்தை இயக்கும் விஷால்: வைரலாகும் புகைப்படங்கள் | 'மகாபாரதம்' தொடரில் கர்ணனாக நடித்த நடிகர் பங்கஜ் தீர் காலமானார் | மாதவனுடன் மோதும் நிமிஷா | கெனிஷாவின் இசை ஆல்பத்திற்காக பாடலாசிரியர் ஆனார் ரவி மோகன் | பிளாஷ்பேக் : பரப்பன அக்ரஹார சிறையில் தமிழ் படம் | பிளாஷ்பேக் : 'ராஷோமோன்' பாதிப்பில் உருவான 'அந்த நாள்' | கார் ரேஸில் தொடர்ந்து பயணிக்க அஜித் முடிவு | காமெடி நடிகை ஆர்த்தி தந்தை காலமானார் | நீ தனியாக ஜெயித்து காட்டு: மகனை தனித்துவிட்ட விக்ரம் |
கே.வி.வாகை மூவிஸ் நிறுவனம் தயாரிக்கும் படம் 'லார்டு லபக்குதாஸ்'. வெங்கட் புவன் இயக்கியுள்ளார். இவர் குருசோமசுந்தரம் நடித்த “பெல்” படத்தை இயக்கியவர். புதுமுகங்கள் திவான், ராஷ்மி ஆகியோர் நாயகன், நாயகியாக அறிமுகமாகிறார்கள். பிருத்தி இசை அமைக்கிறார், மணிராஜூ ஒளிப்பதிவு செய்கிறார்.
படம் பற்றி இயக்குனர் வெங்கட் புவன் கூறும்போது, “ஆள் இல்லாதவனுக்கு ஆண்டவே துணை எனும் வாசகத்தை மைய கருத்தாக கொண்டு இந்த படம் உருவாகி உள்ளது. உண்மையாகவும், நேர்மையாகவும், வாழ்ந்தால் கடவுள் வேண்டியதை வேண்டிய நேரத்தில் தருவான் என்கிற கருத்தை வலியுறுத்தும் படம். காதல், காமெடி, சென்டிமெணட் கலந்து நல்லதொரு பொழுதுபோக்கு படமாக தயாராகியுள்ளது. வருகிற ஜூலை 5ம் தேதி வெளியாகிறது” என்றார்.