பிளாஷ்பேக்: ஒரே படத்தில் போலீஸ் அதிகாரிகளாக நடித்த சிவாஜியும், பிரபுவும் | பிளாஷ்பேக்: மாப்பிள்ளையை வெற்றி பெற வைத்த சர்க்கஸ் காட்சிகள் | அட்லி - அல்லு அர்ஜுன் படத்தில், 'பகிரக்கூடாத ஒப்பந்தம்' | 500 கோடி வசூலில் 'கூலி' | சச்சின் டெண்டுல்கர் ரசித்துப் பார்த்த '3பிஹெச்கே' | மீண்டும் இணைந்த பிரபுதேவா, வடிவேலு | சமந்தாவின் ‛மா இண்டி பங்காரம்' எப்போது துவங்குகிறது | ‛கேஜிஎப்' நடிகர் தினேஷ் மங்களூரு மறைவு | அந்த 7 நாட்கள் படத்தில் மந்திரியாக நடிக்கிறார் கே.பாக்யராஜ் | ராம் சரண் படத்தில் நடிக்க மறுத்த சுவாசிகா |
சூரி, விஜய் சேதுபதி, கவுதம் மேனன், பவானி ஸ்ரீ நடிப்பில் வெற்றிமாறன் இயக்கிய விடுதலை படத்தின் முதல் பாகம் ஏற்கனவே வெளியான நிலையில், தற்போது இரண்டாம் பாகம் தயாராகி வருகிறது. இந்த படத்திலும் சூரி, விஜய் சேதுபதி, மஞ்சுவாரியர் உள்ளிட்ட பலர் முக்கிய வேடங்களில் நடிக்கிறார்கள். குறிப்பாக, முதல் பாகத்தை விட இந்த இரண்டாம் பாகத்தில் விஜய் சேதுபதிக்கு கூடுதல் முக்கியத்துவம் கொடுக்கப்பட்டுள்ளது.
இந்த நிலையில் தற்போது இந்த விடுதலை-2 படம் வருகிற தீபாவளிக்கு திரைக்கு வருவதாக ஒரு தகவல் வெளியாகி இருக்கிறது. ஏற்கனவே இந்த ஆண்டு தீபாவளிக்கு அஜித்தின் விடாமுயற்சி, சூர்யாவின் கங்குவா போன்ற படங்கள் திரைக்கு வர இருப்பதாக கூறப்படும் நிலையில், தற்போது அந்த பட்டியலில் வெற்றிமாறனின் விடுதலை-2 படமும் இடம் பிடித்திருக்கிறது. இந்த படங்கள் தவிர, கவின் நடித்துள்ள கிஸ், பிரதீப் ரங்கநாதன் நடித்துள்ள எல்ஐசி போன்ற படங்களும் தீபாவளிக்கு வெளிவர வாய்ப்பு இருப்பதாக கூறப்படுகிறது.