2025 கூகுள் சர்ச் : 3வது இடத்தில் 'கூலி' | வா வாத்தியார் படத்தின் டிரைலர் வெளியானது | மலேசியாவில் ரசிகர்களுடன் புகைப்படம் எடுத்த அஜித் | ஜனநாயகன் படத்தின் சாட்டிலைட் உரிமையை வாங்கிய ஜீ தமிழ் | டிசம்பர் 9 முதல் 'அரசன்' படப்பிடிப்பு : சிம்பு கொடுத்த தகவல் | ஜி.வி.பிரகாஷின் அடுத்த படம் ஹேப்பிராஜ் | கடந்த சில வாரங்களாக காற்று வாங்கும் தமிழ் சினிமா | புதுமுகங்களின் மாயபிம்பம் | மீண்டும் நாயகியாக நடிக்கும் ரக்சிதா | அவதார் புரமோசன் நிகழ்வில் அர்னால்ட் |

தமிழ் திரையுலகில் 80கள் காலக்கட்டத்தில் முன்னணி நடிகையாக புகழ் பெற்றவர் நடிகை பூர்ணிமா பாக்யராஜ். இயக்குநர் பாக்யராஜை திருமணம் செய்து கொண்ட பின் சினிமாவை விட்டு விலகிய பூர்ணிமா சமீப காலங்களில் சினிமா, சீரியல் என நடித்து வருகிறார். பூர்ணிமா தற்போது மல்லி என்ற தொடரில் தனது தோழிகளான அம்பிகா மற்றும் நளினி உடன் சேர்ந்து நடிக்கிறார்.
இந்நிலையில், அவர் அண்மையில் அளித்துள்ள பேட்டியில், 'நான் நடித்த போதும் சரி இப்போதும் சரி சமைப்பதே இல்லை. காரணம் பிசியான நடிகை என்பதற்காக இல்லை. எனக்கு சமைக்க தெரியாது. சமைத்தாலும் சுவையாக இருக்காது. ஆனால், எனது தோழிகளான ராதிகா, குஷ்பூ பிசியான நடிகைகளாக வலம் வந்தாலும் அவர்கள் சமைப்பது அருமையாக இருக்கும். விதவிதமாக சமைப்பார்கள். அதைபார்க்கும் போது எனக்கு பொறாமையாக இருக்கும்' என்று கூறியுள்ளார்.