இளம் நடிகருடன் காதலா? - கோட் நடிகை விளக்கம் | ஏஆர் ரஹ்மான் பிரிவுக்கும், மோகினி டே பிரிவுக்கும் சம்பந்தம் இல்லை: சாய்ரா பானு வழக்கறிஞர் விளக்கம் | என் மகளை மீட்டு தந்தது செட்டிக்குளங்கரா தேவி தான் : நயன்தாரா அம்மா உருக்கம் | மலையாள வாரிசு வில்லன் நடிகர் மேகநாதன் மறைவு | கிஸ் படத்திலிருந்து அனிரூத் விலகலா? | சம்பந்தி இது சரியில்லை : ‛ராஜாகிளி' பட விழாவில் அர்ஜூன் கலாட்டா | ராம் பொதினேனிக்கு ஜோடியான பாக்யஸ்ரீ போர்ஸ் | சிவகார்த்திகேயனுக்கு வில்லனா? மறுப்பு தெரிவித்த விஷால் | ஹாலிவுட் மியூசிக் மீடியா விருது: ஆடுஜீவிதம் பின்னணி இசைக்காக வென்றார் ஏ.ஆர்.ரஹ்மான் | விஜய் 69வது படத்தில் இணையும் வரலட்சுமி |
ஆந்திர மாநில அரசியலில் புதிய மாற்றத்தை சந்திரபாபு நாயுடு, பவன் கல்யாண் ஏற்படுத்தியுள்ளனர். மொத்தம் உள்ள 175 சட்டசபை தொகுதிகளில் பாஜகவுடன் இணைந்த அவர்களது கூட்டணி 164 தொகுதிகளில் வெற்றி பெற்று சாதனை படைத்துள்ளது.
தெலுங்கு தேசம் 135 தொகுதிகளிலும், பவன் கல்யாணின் ஜனசேனா 21 தொகுதிகளிலும், பாஜக 8 தொகுதிகளிலும் வெற்றி பெற்றுள்ளது. இக்கூட்டணியின் முன்னணி நிலவரம் வந்த உடனேயே சமூக வலைத்தளங்களில் அவர்களுக்கு சினிமா பிரபலங்கள், ரசிகர்கள் வாழ்த்துகளை சொல்ல ஆரம்பித்தனர்.
எப்போதுமே சந்திரபாபு நாயுடு, பவன் கல்யாண் ஆகியோரை விமர்சிக்கும் இயக்குனர் ராம்கோபால் வர்மா கூட நேற்று வாழ்த்து தெரிவித்திருந்தார். சந்திரபாபு நாயுடுவைக் கிண்டலடித்து திரைப்படம் கூட எடுத்தவர் ராம் கோபால் வர்மா. நேற்று அவரை பவன் ரசிகர்கள் கடுமையாகக் கிண்டலடிக்க ஆரம்பித்தனர்.
அடுத்து பவன் கல்யாணின் உறவினரான அல்லு அர்ஜுனும் ரசிகர்களின் கிண்டலுக்குத் தப்பவில்லை. இந்தத் தேர்தலில் ஒய்எஸ்ஆர் கட்சி சார்பில் நந்தியால் தொகுதியில் போட்டியிட்ட அவருடைய நண்பர் ரவிசந்திர கிஷோர் என்பவருக்காக பிரச்சாரம் செய்தார். அப்போது அவருக்கு எதிர்ப்புகள் கிளம்பியது. இந்நிலையில் ரவிசந்திர கிஷோர், தெலுங்கு தேச வேட்பாளரிடம் தோற்றுப் போனார்.
நேற்று, பவன் கல்யாண் வெற்றிக்காக அல்லு அர்ஜுன் வாழ்த்துகளைத் தெரிவித்திருந்தார். அவரது பதிவில் பவன் ரசிகர்கள் பலரும் அவரது நண்பரின் தோல்விக்கும், அல்லு அர்ஜுனின் நிலைப்பாட்டிற்கும் கிண்டலடித்து கமெண்ட் செய்து வருகிறார்கள்.