ரஜினி, சிம்பு, பிரதீப்... : 3 படங்கள் வைத்திருக்கும் அஷ்வத் மாரிமுத்து | நோவா படத்தில் ஆக் ஷனில் ரைசா வில்சன் | அடுத்து கொரோனா வந்தால் சென்னை காலி ; பொள்ளாச்சியில் செட்டில் ஆக ஆசை: விஜய் ஆண்டனி | சாய் பல்லவிக்கு எழுதப்பட்ட கதையில் நடித்த சமந்தா | ஆர்யா 40 : படப்பிடிப்பு நிறைவு | ஜூன் 12ல் 8 படங்கள் ரிலீஸ் | எவ்வளவு காலம் முடியுமா அவ்வளவு காலம் கார் ரேஸ் : அஜித் பேட்டி | 'கருப்பு' - இந்த வாரம் ஓடிடியில் ரிலீஸ் | ரூ.230 கோடி வசூலைக் கடந்த 'பெத்தி' | அப்பாவுக்கு பிறந்தநாள் வாழ்த்து சொன்ன விஷால் |

தமிழ் சினிமாவில் முன்னணி நடிகைகளில் ஒருவராக இருப்பவர் பிரியா பவானி சங்கர். அவர் தன்னுடன் இஞ்சினியரிங் கல்லூரியில் ஒன்றாகப் படித்த ராஜவேலு என்பவரை பல ஆண்டுகளாகவே காதலித்து வருகிறார். ராஜவேலு தற்போது ஆஸ்திரேலியாவில் வேலை பார்த்து வருகிறார்.
தனது காதலரைப் பார்க்க ஆஸ்திரேலியா சென்றுள்ள பிரியா அவருடன் அங்கு சுற்றி வந்ததைப் பற்றி ஒரு பதிவிட்டுள்ளார். “சிட்னி….பிராக்டிக்கலாக எனது இரண்டாவது வீடு. இங்கு வந்த மில்லியன் வருகைகளில் தற்போதுதான் அதை நிறுத்தி கவனித்துள்ளேன். இந்த இடம் எவ்வளவு அழகான, கனிவான மக்கள் உள்ள இடம். சுமார் 6 ஆண்டுகளுக்குப் பிறகு இதயம் நிறைந்த அன்புடனும் நன்றியுடனும் மீண்டும் இந்த நகரத்திற்கு வந்துள்ளேன். எங்கள் விருப்பமான சிறிய இடமான மலேசியன் என்ற இடத்தில் நீண்ட தூரம் நடந்தோம், காபி குடித்தோம், பேசினோம், சிரித்தோம், நகரம் ஒளிர்வதைப் பார்த்தோம், அமைதியில் அமர்ந்தோம், அந்த தருணத்தை எங்களுக்கு வழங்கியதற்காக பிரபஞ்சத்திற்கு நன்றி,” எனக் குறிப்பிட்டுள்ளார்.
பிரியாவுக்கு சில வருடங்களில் திருமணம் நடந்தால் இரண்டாவது வீடான சிட்னியில் தான் செட்டில் ஆவார் போலிருக்கிறது.