நான் கார்த்தியின் தீவிர ரசிகை : கிர்த்தி ஷெட்டி | இன்னும் 50 நாள் : பராசக்தி புதிய போஸ்டர் வெளியீடு | ஆர்யன் படம் வருகிற 28-ல் நெட்பிளிக்சில் வெளியாகிறது | ஜாய் கிறிஸ்டில்லாவுக்கு எதிராக மாதம்பட்டி ரங்கராஜ் தொடுத்த வழக்கை தள்ளுபடி செய்த நீதிமன்றம் | சிம்பு கதையில் ரஜினியா... | ஆண் பாவத்திற்கு பொல்லாதது பின் தமிழ் சினிமா நிலைமை பாவம் | அது நானில்லை : ரகுல் ப்ரீத் சிங் எச்சரிக்கை | தன் பட பூஜையை அர்ஜூன் தாஸ் புறக்கணித்தாரா? | தமிழில் மெலோடி பாடல்கள் குறைந்தது ஏன்?: கங்கை அமரன் | ஹிந்தியில் மீண்டும் தடம் பதிப்பாரா தனுஷ்? |

“சூப்பர் டீலக்ஸ், எனிமி, எம்ஜிஆர் மகன், கோப்ரா, ரோமியோ” படங்களில் நடித்தவர் மிர்ணாளினி ரவி. பி.இ, இஞ்சினியரிங் முடித்து ஐபிஎம் கம்பெனியில் வேலையில் இருந்தவர். டிக் டாக், டப்மாஷ் வீடியோக்கள் மூலம் பிரபலமானார். சினிமா வாய்ப்புகள் வரவே வேலையை ராஜினாமா செய்துவிட்டு நடிகையானார்.
அவருடைய அப்பா செயின்ட் கோபேய்ன் நிறுவனத்தில் 35 ஆண்டுகளாக வேலை செய்து ஓய்வு பெற்றது குறித்து பெருமிதத்துடன் ஒரு பதிவிட்டுள்ளார். “கிண்டியில் உள்ள அண்ணா பல்கலைக்கழகத்தில் எஞ்சினயரிங் முடித்த பின் அப்பா பெங்களூருவில் உள்ள செயின்ட் கோபேய்ன் நிறுவனத்தில் வேலைக்குச் சேர்ந்தார். இந்த மாதம் ஓய்வு பெறும் வரை ஒரே நிறுவனத்தில் 35 வருடங்களாக வேலை பார்த்தார். எங்களுக்கு சிறந்த வாழ்க்கையையும், ஒவ்வொரு விதத்திலும் உத்வேகம் தந்தவர். வேறு எங்கு இருந்தாலும் எனது அப்பா இவ்வளவு மகிழ்ச்சியாக இருந்திருக்க மாட்டார், நன்றி,” என குறிப்பிட்டுள்ளார்.
ஒவ்வொரு பிள்ளைகளுக்கும் அவர்களது அப்பாவின் மகிழ்ச்சிதான் முக்கியமானது.