ஜனநாயகன் குறித்து மகிழ்ச்சியான செய்தி | கலாபவன் மணியின் கனவை நனவாக்கிய மகள் | பேட்ரியாட் படத்தை திரையிடுவதில் கேரள திரையரங்குகள் திடீர் போர்க்கொடி | ஆக்ஷன் மோட் ஆன் : துரந்தர் 2 டிரைலர் வெளியானது | திருமணத்திற்கு ஜோடியாக வந்ததற்கு பதிலடிதான் சங்கீதாவின் புதிய மனு ? | சிரஞ்சீவி, கமல் உள்ளிட்டோருக்கு 2025ன் தெலங்கானா மாநில சினிமா விருதுகள் அறிவிப்பு | 'மேட் இன் கொரியா' இயக்குனர் மனைவியின் கதை : பிரியங்கா மோகன் | இசையில் மட்டும்தான் கவனம்: நடிப்பு தகவலுக்கு முற்றுப்புள்ளி வைத்த சாய் அபயங்கர் | ப்ளடி பாலிட்டிக்ஸ் : கொடி கம்ப அரசியல் | சந்தானம் ஜோடியான கோபிகா ரமேஷ் |

பாலிவுட்டில் சீனியர் நடிகரான ரிஷி கபூரின் மகன் ரன்பீர் கபூர் வாரிசு நடிகர் என்கிற அடையாளத்தையும் தாண்டி சமீப காலமாக 'அனிமல்' படத்தின் மூலம் மிகப்பெரிய உயரத்திற்கு சென்றுள்ளார்.. இவரும் நடிகை ஆலியா பட்டும் திருமணம் செய்து கொண்டு இவர்களுக்கு ராஹா என்கிற பெண் குழந்தை இருக்கிறது. ஆலியா பட் தனது பேட்டிகளில் எல்லாம் தன் கணவர் ரன்பீர் கபூர் ஒரு தந்தையாக தங்கள் குழந்தையை எப்படி பார்த்துக் கொள்கிறார் என பூரிப்புடன் பேசி வருகிறார்.
இந்த நிலையில் சமீபத்திய வீடியோ ஒன்றில் இது குறித்து பேசியுள்ள ரன்பீர் கபூர் கூறும்போது, “எனக்கும் என் தந்தைக்கும் இடையேயான உறவு கொஞ்சம் தூரமாகவே இருந்தது. நட்பு என்று கூட அதை சொல்ல முடியாது. காரணம் அந்த தலைமுறை அப்படி இருந்தது. இருவருக்கும் நடுவில் ஒரு கண்ணாடி சுவர் இருந்தது. ஆனால் இப்போது என் மகள் காலம் அப்படி அல்ல.. வித்தியாசமானது.. நான் அந்த தடுப்பு சுவற்றை உடைக்க விரும்புகிறேன். எனது மகளுக்கு நண்பனாக இருக்க விரும்புகிறேன். அவளுக்கு சிறகுகளை கொடுத்து அவள் எந்தெந்த திசைகளில் பறக்க விரும்புகிறாரோ அப்படி பறக்க வைப்பேன்” என்று கூறியுள்ளார்.




