சத்தங்களுக்கு மத்தியில் புதிய விடியலை நோக்கி பயணம் : கெனிஷாவின் பதிவு வைரல் | நடிகர் ஹம்சவர்தன் 2வது திருமணம் | ஒரு காட்சிக்காக படத்தின் மொத்த உரிமத்தையும் வாங்கிய 'ஜனநாயகன்' படக்குழு | கூகுள் மூலம் தமிழ் கற்று கொண்ட ருக்மணி வசந்த் | கதாநாயகனாக அறிமுகமாகும் பாண்டியன் ஸ்டோர்ஸ் நடிகர் | மலையாள ரீமேக் படத்தில் நடிக்கும் விமல் | மீண்டும் இணையும் எழில், விஷ்ணு விஷால் கூட்டணி | பால்டப்பாவை இயக்கும் விஜய் மில்டன் | சாய் தன்ஷிகாவை திருமணம் செய்கிறார் நடிகர் விஷால்.? | கடந்தவாரம் வெளியான படங்களுக்கு வரவேற்பு எப்படி |
'எப்ஐஆர்' படத்தை இயக்கிய மனு ஆனந்த் இயக்கத்தில் ஆர்யா, கவுதம் கார்த்திக், சரத்குமார், மஞ்சு வாரியர், அனகா, ரைசா வில்சன், அதுல்யா மற்றும் பலர் நடிக்கும் படம் 'மிஸ்டர் எக்ஸ்'.
இப்படத்தில் ஆர்யா சம்பந்தப்பட்ட காட்சிகளின் படப்பிடிப்பு முடிவடைந்துவிட்டது என தயாரிப்பு நிறுவனம் அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது. “மிஸ்டர் எக்ஸ்' ஆக உடல் ரீதியாகவும், மன ரீதியாகவும் மாறியது மிகவும் உற்சாகமானது. என்ன வரப் போகிறது என்பதைக் காண ஆர்வமாக உள்ளேன்,” என அது குறித்து ஆர்யா குறிப்பிட்டுள்ளார்.
இப்படத்தின் படப்பிடிப்பு முடிந்ததை அடுத்து ஆர்யா அடுத்து 'சார்பட்டா பரம்பரை 2' படத்தில் நடிக்க உள்ளார். 'தங்கலான்' படத்தின் வேலைகள் தாமதம் ஆவதால் பா.ரஞ்சித் அதில் பிஸியாக உள்ளார். அதை முடித்துக் கொடுத்த பின் 'சார்பட்டா பரம்பரை 2' ஆரம்பமாகிவிடும் எனத் தெரிகிறது.