மீண்டும் தனுஷூடன் இணையும் சாய் பல்லவி! | 'தி ராஜா சாப்' படத்தில் சிறப்பு தோற்றத்தில் கயல் ஆனந்தி! | புதிதாக மூன்று படங்களை ஒப்பந்தம் செய்த ரியோ ராஜ்! | தேசிய விருது கிடைத்தால் மகிழ்ச்சி: துல்கர் சல்மான் | முதல் முறையாக ரவி தேஜா உடன் இணையும் சமந்தா! | சிம்புவின் மீது இன்னும் வருத்தத்தில் சந்தியா! | 56வது இந்திய சர்வதேச திரைப்பட விழாவில் கவுரவிக்கப்படும் ரஜினிகாந்த்- பாலகிருஷ்ணா! | 25 கோடி பட்ஜெட்டில் உருவாகும் படத்தில் லோகேஷ் கனகராஜின் சம்பளம் 35 கோடியா? | அறக்கட்டளை மூலம் 75 பேரை படிக்க வைத்த பிளாக் பாண்டி! | ரஜினிக்கு நடிப்பு சொல்லிக் கொடுத்த வாத்தியாரின் மறைவு |

நகைச்சுவை படங்களாக தொடர்ந்து இயக்கி வந்த சுந்தர்.சி அரண்மனை திரைப்படம் மூலம் ஹாரர் பக்கமும் தனது கவனத்தை திருப்பினார். அந்த படம் கொடுத்த வெற்றியால் அடுத்தடுத்து அதன் தொடர் பாகங்களை இயக்கிய சுந்தர்.சி 'அரண்மனை 4' படத்தை சமீபத்தில் வெளியிட்டார். இந்த படம் மிகப்பெரிய வெற்றியைப் பெற்று 25 நாட்களைக் கடந்து ஓடியதுடன் 100 கோடி வசூல் கிளப்பிலும் இணைந்தது. இந்த நிலையில் இன்று (மே 31) இந்த படத்தின் ஹிந்தி பதிப்பு ரிலீஸாகி உள்ளது.
இந்த படத்தில் இறந்த பின்னும் கூட தனது குழந்தைகளை காப்பாற்ற துடிக்கும் கதாபாத்திரத்தில் கதாநாயகியாக தமன்னா நடித்திருந்தார். கதாநாயகியை மையப்படுத்தி உருவாகியுள்ள ஒரு தென்னிந்திய படம் 100 கோடி வசூலித்துள்ளது பெருமிதமாக இருக்கிறது என்றும், இயக்குனர் சுந்தர்.சி இந்தியாவின் டாப் 3 இயக்குனர்களில் ஒருவர் என்றும், தொழில்நுட்பத்தை அவர் அழகாக கையாள்கிறார் என்றும் மும்பையில் நடைபெற்ற இந்தப்படத்தின் நிகழ்ச்சியில் கலந்து கொண்ட போது கூறியுள்ளார் தமன்னா.