காதலருடன் ஹூமா குரேஷிக்கு நிச்சயதார்த்தம் நடந்ததா? | ரோபோ சங்கர் நினைவாக குபேரர் கோவிலுக்கு ரோபோ யானையை பரிசளித்த நடிகர் டிங்கு! | தீபாவளிக்கு 'கருப்பு' படத்தின் பர்ஸ்ட் சிங்கிள் வெளியாகிறது! | ஹாட்ரிக் அடிக்கிறாரா பிரதீப் ரங்கநாதன் | ராஜமவுலி தயாரிப்பில் பஹத் பாசில் புதிய பட படப்பிடிப்பு துவங்கியது! | இசைத்துறையில் சாதிக்க என்ன செய்ய வேண்டும்? அழகாக சொல்கிறார் அனுராதா ஸ்ரீராம் | 'காந்தாரா சாப்டர் 1' ஹிட்: ஆன்மிக பயணம் செல்லும் ரிஷப் ஷெட்டி | ரஜினி பிறந்தநாளில் பிரமாண்டமாக ரீ ரிலீஸ் ஆகும் அண்ணாமலை! | இயக்குனர் கென் கருணாஸ் உடன் இணைந்த ஜி.வி. பிரகாஷ்! | 'பள்ளிச்சட்டம்பி' படப்பிடிப்பை நிறைவு செய்த கயாடு லோஹர் |
இந்தியா முழுக்கவே எதிர்பார்க்கப்படும் படம் 'கல்கி 2898 ஏடி'. பிரபாஸ் நாயகனாக நடிக்கும் இந்தப் படத்தில் அமிதாப் பச்சன், கமல்ஹாசன், பிரபாஸ், தீபிகா படுகோனே மற்றும் திஷா பதானி உள்ளிட்ட இந்தியாவின் முன்னணி நட்சத்திரங்கள் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர். நாக் அஸ்வின் இயக்கியுள்ளார். வைஜெயந்தி மூவிஸ் தயாரித்துள்ளது. 600 கோடி ரூபாய் செலவில் புராணம் கலந்து சயின்ஸ் பிக்ஷன் படமாக இது உருவாகி உள்ளது. வருகிற ஜூன் 27ம் தேதி அன்று திரைக்கு வருகிறது.
இந்த படத்தில் பிரபாஸ் சூப்பர் ஹீரோவாக நடிக்கிறார். இதில் அவர் பயன்படுத்தும் காருக்கு 'புஜ்ஜி' என்று பெயர் வைத்துள்ளனர். இந்த கார் நினைத்த உருவத்திற்கு மாறும், பிரபாசோடு பேசும். இந்த கார் கடந்த 22ம் தேதி ஐதராபாத்தில் நடந்த விழாவில் அறிமுகப்படுத்தப்பட்டது. இந்த காரை மஹேந்திரா கம்பெனி தயாரித்துள்ளது.
தற்போது இந்த வாகனம் சென்னை மஹேந்திரா சிட்டிக்கு கொண்டு வரப்பட்டு, பொதுமக்கள் முன்னிலையில் பார்வைக்கு வைக்கப்பட்டது. மூன்று சக்கரங்களுடன், நவீன வசதிகளுடன் எதிர்கால வாகனமாக இது உருவாக்கப்பட்டுள்ளது. இந்த காரை பட ரிலீசுக்கு பிறகு பல ஊர்களுக்கு எடுத்துச் சென்று பொதுமக்கள் பார்வைக்கு வைக்க படக்குழுவினரும், மஹேந்திரா நிறுவனத்தினரும் முடிவு செய்துள்ளனர்.