ராமின் பறந்துபோ படத்தை பாராட்டிய நயன்தாரா | ‛ஆப் ஜெய்சா கோய்' படத்தில் என் கேரக்டர் சவாலானது : மாதவன் | ரஜினி படத்தை இயக்குகிறாரா வினோத் | ரகசியத்தை சொன்ன சார்லி : மிரண்டு போன பன் பட்டர் ஜாம் படக்குழு | விஷ்ணு விஷால் மகளுக்கு அமீர்கான் பெயர் வைத்தது ஏன்? | சாய்பல்லவி, ஐஸ்வர்ய லட்சுமி, அதிதி வரிசையில் ஹீரோயின் ஆன டாக்டர் | மரபணு மாற்றப்பட்ட மனிதனின் கதை : ‛கைமேரா' அர்த்தம் இதுதான் | சூர்யாவுடன் நடிப்பது வாழ்நாள் கனவு: மீனாட்சி தினேஷ் | 'இந்தியன் 2, தக் லைப்' தோல்விகள் : 'இந்தியன் 3' எதிர்காலம் என்ன ? | பிளாஷ்பேக்: ஆக்ஷன் ஹீரோவாக நடித்த ராஜேஷ் |
1980- 90களில் சில்வர் ஜூப்ளி நாயகனாக திகழ்ந்தவர் மோகன். நீண்ட இடைவெளிக்கு பிறகு தற்போது அவர் நாயகனாக நடித்துள்ள படம் ‛ஹரா'. விஜய் ஸ்ரீ இயக்கி உள்ள இந்த படத்தில் மோகனுடன் இணைந்து அனுமோல், யோகி பாபு, சாருஹாசன், சுரேஷ் மேனன், வனிதா விஜயகுமார் உள்ளிட்ட பலர் முக்கிய வேடங்களில் நடித்திருக்கிறார்கள். ஜூன் மாதம் 7ம் திரைக்கு வரும் இந்த படத்தின் டிரைலர் தற்போது வெளியாகி இருக்கிறது. தனது மகளின் மரணத்திற்கு காரணமானவர்களை பழிவாங்கும் வேடத்தில் மோகன் நடித்துள்ளார். ஆக்ஷன் த்ரில்லர் கதையில் உருவாகியுள்ள இப்படத்தில் தற்போது 93 வயதாகும் நடிகர் சாருஹாசன், கமலின் நாயகன் படத்தில் இடம்பெற்ற வேலு நாயக்கர் என்ற கேரக்டரில் நடித்திருக்கிறார்.