சினிமாவுக்கு முழுக்கு போடுகிறாரா த்ரிஷா... | பாலகிருஷ்ணாவிற்கு ஜோடியாக சம்யுக்தா மேனன் | விஜய் ரசிகர்களுக்கு காத்திருக்கும் அதிர்ச்சி | லூசிபர் 2ம் பாகத்தின் டீசர் அப்டேட் | பிறந்தநாளில் பிரமாதம்: உடல் உறுப்புகளை தானம் செய்தார் டி.இமான் | கும்பமேளாவில் பாசி மணி ஊசி விற்றவர் : சினிமா நடிகை ஆகிறார் மோனலிசா | பிளாஷ்பேக் : கடைசி வரை அப்பா, தாத்தாவாக நடித்த வி.எஸ்.ராகவன் | துணை நடிகர் ஜெயசீலன் காலமானார் | பிளாஷ்பேக் : தேசிய விருதை இழந்த மீனா | விஷால் உடல்நலம் குறித்து அவதூறு : 3 யு-டியூப் சேனல்கள் மீது வழக்கு |
'பருத்தி வீரன்' படத்தில் கதாநாயகனாக அறிமுகமான கார்த்தியின் 25வது படமாக 'ஜப்பான்' படம் அமைந்தது. அந்தப் படத்திற்குப் பிறகு அடுத்தடுத்து ஒரே சமயத்தில் இரண்டு படங்களில் கார்த்தி நடித்து வந்தார். கார்த்தியின் 26வது படமாக நலன் குமாரசாமி ஒரு படத்தையும், கார்த்தியின் 27வது படமாக பிரேம்குமார் மற்றொரு படத்தையும் இயக்கி வந்தார்கள்.
இன்று கார்த்தியின் பிறந்தநாளை முன்னிட்டு நேற்று கார்த்தியின் 27வது படத்தின் தலைப்பு அறிவிப்பு வெளியானது. அப்படத்திற்கு 'மெய்யழகன்' என்ற தலைப்பை அறிவித்தார்கள். இன்று அவரது 26வது படத்திற்கு 'வா வாத்தியார்' என்ற தலைப்பை அறிவித்துள்ளார்கள். அடுத்தடுத்து கார்த்தியன் இரண்டு படங்களின் அப்டேட் வெளியாகி உள்ளது.
அடுத்து இரண்டு படங்களின் வெளியீட்டுத் தேதி அறிவிப்புகளும் வரலாம். 'மெய்யழகன்' படம் முதலில் வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.