இந்த 3 விஷயங்களும் முக்கியமானவை : தீபிகா படுகோனே | உருவக்கேலி விவகாரம் : கயாடு லோஹர் கொடுத்த விளக்கம் | அடி வாங்க தயாரா : குஷ்பு கோபம் | தனுஷின் தேரே இஷ்க் மெயின் டிரைலர் வெளியீடு : வரவேற்பு எப்படி | காந்தா படத்தின் முதல் நாள் வசூல் விவரம் : அதிகாரப்பூர்வ அறிவிப்பு | ரஜினி படத்திலிருந்து சுந்தர் சி விலகல் ஏன் : கமல் சொன்ன பதில் | ஜப்பானில் வெளியாகும் மலைக்கோட்டை வாலிபன் : ரிலீஸ் தேதி அறிவிப்பு | தேசிய விருதுக்கு படம் அனுப்புவதில் ஏற்பட்ட சிக்கல் : நீதிமன்றத்தை நாடிய பஹத் பாசில் படக்குழு | மம்முட்டிக்கு பிரித்விராஜ் சிபாரிசு, விநாயகனுக்கு மம்முட்டி சிபாரிசு : களம்காவல் சுவாரசியம் | சித்தார்த், ராஷி கண்ணா இணையயும் 'ரெளடி அண்ட் கோ' |

தமிழ் சினிமாவில் ஏராளமான படங்களில் நாயகியாக நடித்து அசத்தியவர் ராதிகா. தற்போது குணச்சித்ர வேடங்களில் நடித்து வருவதோடு டிவி சீரியல்களையும் தயாரித்து வருகிறார். தமிழகத்தில் நடந்து முடிந்துள்ள லோக்சபா தேர்தலில் பா.ஜ., சார்பில் விருதுநகர் தொகுதியில் போட்டியிட்டுள்ளார். முன்னதாக கடந்த ஒரு மாதமாக மாவட்டம் முழுக்க தீவிர பிரச்சாரத்தில் ஈடுபட்டு வந்தார்.
இந்நிலையில் அவருக்கு காலில் அடிபட்டுள்ளதாக தெரிகிறது. காலில் கட்டுடன் வீட்டில் ஓய்வெடுத்து வரும் அவரை மூத்த நடிகர் சிவகுமார் நேரில் சென்று நலம் விசாரித்துள்ளார். அதோடு, தான் வரைந்த ஓவியங்களையும் ராதிகாவிடம் சிவகுமார் வழங்கி உள்ளார்.
இந்த வீடியோவை ராதிகா தனது எக்ஸ் தளத்தில் வெளியிட்டு, ‛‛எனக்கு காலில் ஏற்பட்ட அடியால் அதிலிருந்து மீண்டு வருகிறேன். அண்ணன் சிவகுமார் என்னை வந்து பார்த்தது மகிழ்ச்சி. நாங்கள் இருவரும் பல நிகழ்வுகளையும், அவர் வரைந்த ஓவியங்கள் பற்றியும் பகிர்ந்து கொண்டோம்'' என தெரிவித்துள்ளார்.
தோழிகள் நலம் விசாரிப்பு

இதேப்போல் அவர் ஹீரோயினாக நடித்து வந்த காலத்தில் அவருடன் பீக்கில் இருந்த நாயகிகள் சுஹாசினி, லிஸி பிரியதர்ஷன் மற்றும் பூர்ணிமா பாக்யராஜ் ஆகியோரும் ராதிகாவிடம் நலம் விசாரித்துள்ளனர். அந்த போட்டோக்களை பகிர்ந்து ராதிகா, ‛‛நண்பர்கள் என்னை ஊக்கப்படுத்துகிறார்கள். 80ஸ் லவ், நன்றி'' என குறிப்பிட்டுள்ளார்.