மீண்டும் ஹீரோவான ஆனந்த்ராஜ் | போலீஸ் கமிஷனரிடம் அம்பிகா வைத்த கோரிக்கை | போதை பொருள் விவகாரம் : ஸ்ரீகாந்த், கிருஷ்ணாவுக்கு சம்மன் | பிளாஷ்பேக் : சபரிமலையில் படப்பிடிப்பு ; நடிகைகளுக்கு அபராதம் | பிளாஷ்பேக் : சினிமாவான கல்கியின் சமூக கதை | தனி கதாநாயகனாக முதல் வெற்றியைப் பதிவு செய்த துருவ் விக்ரம் | பிரபாஸ் பிறந்தநாளில் 3 அப்டேட்கள் தந்த தயாரிப்பாளர்கள் | பிரதீப் ரங்கநாதனும்... பின்னே மலையாள ஹீரோயின்களின் ராசியும்… | ஹீரோ ஆனார் இயக்குனர் லோகேஷ் கனகராஜ் | ‛சக்தி திருமகன்' முதல் ‛ஓஜி' வரை : இந்த வார ஓடிடி ஸ்பெஷல்....! |

சினிமாவில் வாய்ப்பு தேடுவதற்கு முன்பு போல போட்டோ ஷூட் செய்து கம்பெனி கம்பெனியாக ஏறி இறங்கும் முறை எல்லாம் மாறிவிட்டது. இப்போது எல்லாம் இன்ஸ்டாகிராம், யு-டியூப் மூலமாகவே பல பேர் தங்களது திறமைகளை வெளிப்படுத்தி நேரடியாக சினிமா வாய்ப்புகளை பெறுகின்றனர். அந்த வகையில் பிரபல யு-டியூபரான நிஹாரிகா என்எம் என்பவர் தற்போது அதர்வா நடிக்கும் படம் ஒன்றில் கதாநாயகியாக நடித்து வருகிறார்.
நகைச்சுவையாக ரீல்ஸ் வீடியோக்கள் வெளியிட்டு பிரபலமான இவர் சமீப காலமாக மகேஷ்பாபு, விஜய் தேவரகொண்டா, அமீர்கான், அஜய் தேவ்கன் உள்ளிட்டோரின் படங்கள் வெளியாகும் போது அவர்களுடன் இணைந்து படத்தின் புரோமோஷன் வீடியோக்களையும் எடுத்து வெளியிட்டு இன்னும் அதிக அளவில் திரையுலகிலும் பிரபலமானவர்.
இந்த நிலையில் தான் அவர் அதர்வாவுக்கு ஜோடியாக நடிக்க ஒப்பந்தம் ஆகியுள்ளார் நிஹாரிகா. அறிமுக இயக்குனர் ஆகாஷ் பாஸ்கரன் என்பவர் இயக்கும் இந்த படத்தை லைகா நிறுவனம் தயாரிக்கிறது. இதில் நியூயார்க்கில் வசிக்கும் பெண்ணாக நிஹாரிகா நடித்துள்ளார். படத்தின் பெரும்பகுதி காட்சிகளும் நியூயார்க்கில் படமாக்கப்பட்டுள்ளன.




