வாழைப்பழம் முதல் சொப்பன சுந்தரி வரை...: 35 ஆண்டுகளை கடந்தும் பேசப்படும் ‛கரகாட்டக்காரன்' | அருண்ராஜா காமராஜ் இயக்கத்தில் விஷ்ணு விஷால்! | சிவகார்த்திகேயன் - ஏ.ஆர்.முருகதாஸ் படத்தில் இணைந்த விக்ராந்த்! | டபுள் ஐ ஸ்மார்ட் படத்தின் ரிலீஸ் தேதி அறிவிப்பு! | மன்னாதி மன்னன், தீனா, சந்திரமுகி-2 - ஞாயிறு திரைப்படங்கள் | முத்தையா இயக்கத்தில் பிரபு, கார்த்திக் மகன்கள் | 'மகாராஜா' - விஜய் சேதுபதியின் 50வது படம் தந்த திருப்பம் | லண்டனில் படமாகும் டாக்சிக் | ‛சூரரைப்போற்று' ஹிந்தி ரீ-மேக்கான ‛சர்பிரா' ரிலீஸ் தேதி அறிவிப்பு | மீண்டும் கெட்ட வார்த்தை பேசி ரசிகர்களின் கண்டனத்திற்கு ஆளான மஞ்சும்மேல் பாய்ஸ் நடிகர் |
விஷால் கும்பார் இயக்கத்தில் நடிகை அஞ்சலி பாட்டீல், ஸ்ரீனிவாஸ் போக்லே மற்றும் ஷரிப் ஹாஷ்மி ஆகியோர் முதன்மை வேடத்தில் நடித்துள்ள ஹிந்தி படம் ‛மல்ஹர்'. ரிஷி சக்சேனா, முகமது சமத் மற்றும் அக்ஷதா ஆச்சார்யா ஆகியோரும் நடித்துள்ளனர். பிரபுல்லா பசாத் தயாரித்துள்ளார். டி.சதீஷ் மற்றும் சாரங் குல்கர்னி இசையமைத்துள்ளனர்.
ஒரு கிராமத்தில் நடக்கும் மூன்று கதைகளாக ஒவ்வொரு கதையுடனும் ஒரு தொடர்பு இருப்பது போன்று இந்த படம் உருவாகி உள்ளது. காதல் கலந்த குடும்ப படமாக தயாராகி உள்ளது. ஹிந்தி மற்றும் மராத்தி மொழிகளில் மே 31ம் தேதி ரிலீஸாவதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
தயாரிப்பாளர் பிரபுல்லா பசாத் கூறுகையில், ‛‛மல்ஹர் படம் கட்ச் என்ற கிராம பகுதியில் நடக்கும் மூன்று கதைகளின் அற்புதமான சங்கமம் ஆகும். பார்வையாளர்களுக்கு முழுமையான பொழுதுபோக்கு கிடைக்கும் வகையில் படத்தை சுவாரஸ்யமாக எடுத்துள்ளோம். இந்தப் படம் இரண்டு சிறந்த நண்பர்களின் கதையைச் சொல்கிறது'' என்றார்.