சரிய வைத்த 'சிக்கந்தர்', காப்பாற்றிய 'குபேரா' | 'கூலி' முதல் சிங்கிள் அப்டேட்… இன்று மாலை 6 மணிக்கு… | ஆமிர்கான் படத்திற்கு மகேஷ்பாபு பாராட்டு | விஜய்க்கு வாழ்த்து போட்டோ: பரபரப்பை ஏற்படுத்திய திரிஷா | தென்னிந்தியப் படங்கள் இந்திய கலாச்சாரத்தை பிரதிபலிக்கின்றன : பவன் கல்யாண் | 'ஹிட் 3' மீது கதை திருட்டு வழக்கு | விஜய் மல்லையாவை பார்த்து குடிப்பதை நிறுத்தினேன்: ராஜு முருகன் சொல்கிறார் | விஜயதேவரகொண்டா மீது வன்கொடுமை வழக்கு பதிவு | பிளாஷ்பேக்: கங்கை அமரனை நம்பி ஏமாந்த ஏவிஎம் | பிளாஷ்பேக்: அண்ணி உறவை பேசிய முதல் படம் |
'கேஜிஎப் 2' படத்திற்குப் பிறகு யஷ் கதாநாயகனாக நடிக்கும் படம் 'டாக்சிக்'. தமிழில் மாதவன் நாயகனாக நடித்து வெளிவந்த 'நள தமயந்தி' படத்தில் நாயகியாக நடித்த கீது மோகன்தாஸ் இந்தப் படத்தை இயக்குகிறார்.
இந்தப் படத்தில் ஹிந்தி நடிகையான கியாரா அத்வானி கதாநாயகியாக நடிக்க உள்ளார். தற்போது ஷங்கர் இயக்கத்தில் ராம் சரண் நடித்து வரும் 'கேம் சேஞ்சர்' படத்தில் நடித்து வரும் கியாரா மீண்டும் ஒரு தென்னிந்தியப் படத்தில் நடிக்க சம்மதித்திருக்கிறார்.
இப்படத்தில் யஷ் சகோதரி கதாபாத்திரத்தில் நயன்தாராவை நடிக்க வைக்க பேசி வருவதாகத் தகவல். முக்கியத்துவம் வாய்ந்த அந்த கதாபாத்திரத்தில் நயன்தாரா நடிப்பாரா என்பது இனிமேல்தான் தெரிய வரும்.