டிசம்பர் 12ல் 'அகண்டா 2'வை வெளியிட தீவிர முயற்சி | லோகேஷ் கனகராஜ், அமீர் கான் படம், பேச்சுவார்த்தையில்… | வெளியீட்டிற்குத் தடை இருந்தாலும் இன்று 'வா வாத்தியார்' நிகழ்ச்சி | ஜப்பானில் வெளியாகும் புஷ்பா 2 | தனுஷ் 54வது படத்தின் படப்பிடிப்பை நிறைவு செய்த சுராஜ் வெஞ்சாரமூடு | டாக்சிக் படத்தில் இரண்டு இசையமைப்பாளர்கள் | தொடர் சிக்கலில் சிங்கிள் தியேட்டர்கள் : விடிவுகாலம் பிறக்குமா? | 23வது சென்னை திரைப்பட விழாவில் தமிழ் 12 படங்கள் | ஒரே ஒரு ஹிட்டுக்காக காத்திருக்கும் ஜி.வி.பிரகாஷ் | தமிழை விட்டு விலகி செல்கிறாரா சூர்யா? |

பாஸ்கர் சக்தி இயக்கத்தில், குங்குமராஜ் முத்துசாமி, வைரமாலா, ரமேஷ் வைத்யா மற்றும் பலர் நடிக்கும் படம் 'வடக்கன்'. இப்படத்தின் டீசர் கடந்த மாதம் வெளியானது.
படத்திற்கு சென்சார் வாங்க தணிக்கைக்கு சென்றது படம். ஆனால், 'வடக்கன்' என்ற தலைப்புக்கு அவர்கள் எதிர்ப்பு தெரிவித்துள்ளனர். வட மாநிலங்களிலிருந்து இங்கு வந்து பணிபுரியும் தொழிலாளர்களை 'வடக்கன்' என்று கிண்டலாக சிலர் குறிப்பிடுவார்கள். இங்குள்ளவர்களின் வேலை வாய்ப்புகளை அவர்கள் பறிப்பதாகவும் சிலர் குற்றம் சாட்டுகிறார்கள்.
டீசரிலேயே 'வடக்கன்' என பல வசனங்கள் இடம் பெற்றுள்ளது. தலைப்புக்கு எதிர்ப்பு என்றால் அந்த வசனங்கள் அனைத்தையுமே நீக்கியாக வேண்டும். அதனால் படத்தை ரிவைசிங் கமிட்டிக்குக் கொண்டு செல்ல தயாரிப்பு நிறுவனம் முடிவு செய்துள்ளதாம்.