அஸ்வத் மாரிமுத்துவிற்கு விண்ணப்பித்த 15 ஆயிரம் உதவி இயக்குனர்கள்! | கவுதம் ராம் கார்த்திக் 19வது படத்தின் படப்பிடிப்பு துவங்கியது! | ''இப்போ ரிஸ்க் எடுக்கலைனா.. எப்பவும் இல்ல'': சினிமா என்ட்ரி குறித்து மனம்திறந்த காவ்யா அறிவுமணி | த்ரிவிக்ரம் இயக்கத்தில் தனுஷ்? | குட் பேட் அக்லி - முன்பதிவு நிலவரம் என்ன? | அஜித், தனுஷ் கூட்டணி அடுத்த கட்டத்திற்கு நகர்கிறது! | 'ரெட்ட தல' படத்தின் புதிய அப்டேட்! | ராஜமவுலியுடன் இணையாதது ஏன்? சிரஞ்சீவி விளக்கம் | சென்னையை விட்டு சென்றது ஏன்? சசிகுமார் விளக்கம் | தமிழிலும் வெளியாகும் 'இத்திக்கர கொம்பன்' |
தமிழ் சினிமா பிரபலங்களை தங்களில் ஒருவராக பார்க்கும் மனோபாவம் பல ரசிகர்களுக்கு உண்டு. அதனால்தான் சிலரது பிரிவுகளை அவர்களால் ஏற்றுக் கொள்ள முடியவில்லை. ஆதர்ஷ தம்பதிகள் என்று அழைக்கப்பட்ட சிலர் கூட சில வருடங்களிலேயே பிரிந்து ரசிகர்களுக்கு அதிர்ச்சியைக் கொடுத்துள்ளனர். அப்படியான ஒரு அதிர்ச்சி ஜிவி பிரகாஷ்குமார், சைந்தவி பிரிவு கொடுத்துள்ளது.
இருவரும் பள்ளியில் ஒன்றாக படித்த நாட்களிலேயே காதலித்தோம் என பேட்டிகளில் சொல்லியிருக்கிறார்கள். சுமார் பத்து வருடக் காதல், பத்து வருட திருமண உறவு என இருபது வருடங்கள் காதலாக வாழ்ந்து இப்போது பிரிகிறோம் என அறிவித்தது பலரையும் கேள்வி கேட்க வைத்துள்ளது. பொருத்தமான தம்பதியாயிற்றே. இசையும், குரலுமாய் வாழ்ந்தார்களே என்ற விமர்சனத்தையும் வைத்துள்ளது. அவற்றிற்கெல்லாம் பதிலளிக்கும் விதமாக ஜிவி பிரகாஷும் தற்போது அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளார்.
ஜிவி பிரகாஷ், சைந்தவி பிரிவு அறிவிப்பு போன்றே சிலரது பிரிவுகளும் ரசிகர்கள் எதிர்பார்க்காத விதத்தில் அமைந்தது.
தனுஷ் - ஐஸ்வர்யா
2002ல் வெளிவந்த 'துள்ளுவதோ இளமை' படம் மூலம்க கதாநாயகனாக அறிமுகமானவர் தனுஷ். இரண்டு மூன்று படங்களில் நடித்த உடனேயே 2004ல் அவரை விட வயதில் மூத்தவரான ஐஸ்வர்யா ரஜினிகாந்த்தைக் காதல் திருமணம் செய்தார். அப்போது திரையுலகில் உள்ள பலரையும் வியக்க வைத்தது அவர்களது காதல் திருமணம். சுமார் 18 வருடங்களுக்கும் மேலாக ஒன்றாக வாழ்ந்து இரண்டு மகன்கள் உள்ள நிலையிலும் இருவரும் பிரிகிறோம் என்ற அறிவிப்பு தனுஷ் ரசிகர்களையும், ரஜினி ரசிகர்களையும் அதிர்ச்சியடைய வைத்தது. இப்போது சட்டப்படியான விவாகரத்துக்கு நீதிமன்றத்தை நாடியுள்ளனர்.
சமந்தா - நாகசைதன்யா
சென்னையில் பிறந்து வளர்ந்தாலும் தெலுங்கில் பிரபலமாக முன்னணி நடிகையானவர் சமந்தா. அவருடன் நடித்த தெலுங்கு நடிகர் நாகசைதன்யாவைத் தீவிரமாகக் காதலித்தார். இருவரது திருமணமும் கோவாவில் சிறப்பாக நடைபெற்றது. இருவருக்கும் இடையே என்ன மோதலோ தெரியவில்லை நான்கே வருடங்களில் இருவரும் பிரிந்தனர். தனக்கு வாழ்வளித்த தெலுங்கு சினிமாவை விட்டு விலகாமல் இன்னமும் ஐதராபாத்திலேயே தங்கியுள்ளார் சமந்தா.
அமலா பால் - ஏஎல் விஜய்
தான் இயக்கிய 'தெய்வத் திருமகள், தலைவா” படங்களில் நடித்த மலையாள நடிகை அமலா பால் மீது காதல் கொண்டு திருமணம் செய்து கொண்டார் இயக்குனர் ஏஎல் விஜய். ஆனால், மூன்றே வருடங்களில் இருவரும் பிரிந்தார்கள். அடுத்த இரண்டு வருடங்களில் வேறொரு பெண்ணைத் திருமணம் செய்து கொண்டார் விஜய். அதன்பின் தனியாகவே வாழ்ந்த அமலா பால் பற்றி சில காதல் வதந்திகள் வெளிவந்தன. இந்நிலையில் ஜகத் தேசாய் என்பவரைக் கடந்த வருடம் திருமணம் செய்து கொண்டார் அமலா பால். விரைவில் ஒரு குழந்தைக்குத் தாயாகவும் உள்ளார்.
இப்படியான ஒரு சில விவாகரத்துக்கள் பற்றித்தான் இன்றைய ரசிகர்களுக்குத் தெரியும். ஆனால், கமல்ஹாசன் - வாணி கணபதி, கமல்ஹாசன் - சரிகா, சரத்குமார் - சாயா, பிரதாப் போத்தன் - ராதிகா, ரகுவரன் - ரோகிணி, பிரசாந்த் - கிரகலட்சுமி, பார்த்திபன் - சீதா, ராமராஜன் - நளினி, அரவிந்த்சாமி - காயத்ரி, பிரகாஷ் ராஜ் - லலிதாகுமாரி, பிரபுதேவா - ரமலத், இயக்குனர் செல்வராகவன் - சோனியா அகர்வால், மனோஜ் கே ஜெயன் - ஊர்வசி, சரிதா - முகேஷ், ரேவதி - சுரேஷ் மேனன், கவுதமி - சந்தீப் பாட்டியா, சித்தார்த் - மேக்னா, விஷ்ணு விஷால் - ரஜினி, இசையமைப்பாளர் இமான் - மோனிகா என பட்டியல் போய்க் கொண்டே இருக்கும்.