'ஜனநாயகன்' விவகாரம்: இனியாவது விஜய் பேசுவாரா? | தன் படங்களையே கண்டுக்கொள்ளாத நடிகர்கள் | சினிமாவை விதைத்துக் கொண்டே இருப்போம்: செழியன் | 'ப்ராமிஸ்' ஆங்கில தலைப்பு வைத்தது ஏன்? தயாரிப்பாளர் விளக்கம் | 'மாய பிம்பம்' இயக்குனருக்கு அடித்தது ஜாக்பாட் : வேல்ஸ் பிலிம்ஸ்க்கு படம் இயக்குகிறார் | திருவண்ணாமலையில் ஏறிய நடிகையிடம் வனத்துறை விசாரணை | பிளாஷ்பேக்: பாலிவுட் படத்தில் நடித்த பத்மினி, ராகினி | பிளாஷ்பேக்: நயன்தாராவை தவறவிட்ட பார்த்திபன் | சம்மர் ஜாக்பாட் ஆக 21 நாள் இடைவெளியில் அடுத்தடுத்து வெளியாகும் மோகன்லாலின் படங்கள் | வருண் தவானுக்கு மும்பை மெட்ரோ நிர்வாகம் எச்சரிக்கை |

நடிகர் ரியோ ராஜ் சின்னத்திரையின் மூலம் ரசிகர்கள் மத்தியில் பிரபலமானவர். தமிழில் பிளான் பண்ணி பண்ணணும், நெஞ்சமுண்டு நேர்மையுண்டு ஓடு ராஜா ஆகிய படங்கள் பெரிதளவில் வெற்றியடையவில்லை. கடைசியாக ரியோ ராஜ் நடித்து வெளிவந்த 'ஜோ' திரைப்படம் நல்ல வரவேற்பு கிடைத்து வெற்றி பெற்றது.
தற்போது ரியோ ராஜ் பிஸியாக மூன்று படங்களில் நடித்து வருகிறார். இந்த நிலையில் யுவன் சங்கர் ராஜா தயாரிப்பில் ரியோ ராஜ் கதாநாயகனாக புதிய படத்தில் நடிக்கவுள்ளார். இதனை அறிமுக இயக்குனர் ஒருவர் இயக்குகிறார். மேலும், இதில் கதாநாயகியாக மாளவிகா மனோஜ் மற்றும் பிரீத்தி அஸ்ரானி ஆகியோருடன் பேச்சுவார்த்தை நடத்தி வருவதாக கூறப்படுகிறது. வருகின்ற நாட்களில் இப்படம் குறித்து அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகும் என்கிறார்கள்.




