பிளாஷ்பேக்: டைட்டில் பிரச்னை காரணமாக சிரஞ்சீவி படத்தில் இருந்து விலகிய ஸ்ரீதேவி | தவறுகள் செய்ய சல்மான் கான் பயப்பட மாட்டார் ; இயக்குனர் சூரஜ் பார்ஜாத்யா ஓபன் டாக் | மோகன்லாலின் எம்புரான் படத்தால் மீண்டும் தள்ளிப்போகிறது வீரதீரசூரன் ரிலீஸ் | லிப்லாக் காட்சியில் நடிக்க பிரதீப் ரங்கநாதனை வலியுறுத்திய இயக்குனர்கள் | காதலர் தினத்தில் காதலரை அறிமுகம் செய்த பிக்பாஸ் ஜாக்குலின் | மோகன்லாலின் ஆஸ்தான தயாரிப்பாளர் போர்க்கொடி ; கீர்த்தி சுரேஷின் தந்தைக்கு வலுக்கும் எதிர்ப்பு | எல்லோருக்குள்ளும் இதயம் முரளி இருக்கிறார்: அதர்வா நெகிழ்ச்சி | பிளாஷ்பேக் : விஜய் சேதுபதிக்கும் மூத்த வாத்தியார் ராஜேஷ் | பிளாஷ்பேக் : தமிழ் சினிமாவான பிரெஞ்ச் நாடகம் | எந்த சொத்து, எப்போது வாங்கினேன் என்பது தெரியாது : நீதிமன்றத்தில் இளையராஜா வாக்குமூலம் |
விக்ரம் வேதா, பரியேறும் பெருமாள் உள்ளிட்ட படங்களில் நடித்து இளம் நம்பிக்கை நட்சத்திரமாக உருவெடுத்தவர் நடிகர் கதிர். அதன்பிறகு அவர் நடித்த சில படங்கள் பெரிய அளவில் அவருக்கு கை கொடுக்காவிட்டாலும் அவர் நடித்த வெப் சீரிஸும் ஓரளவுக்கு அவருக்கு நல்ல பெயரை பெற்று தந்தது. தற்போது மாணவன் என்கிற படத்தில் நடித்து வருகிறார் கதிர். இன்னொரு பக்கம் மலையாளத்தில் அவர் 'மீச' என்கிற படத்தில் நடிக்க ஏற்கனவே ஒப்புக் கொண்டிருந்தார். இந்த படத்தை எம்.சி ஜோசப் என்பவர் இயக்குகிறார்.
பீஸ்ட், ஜிகர்தண்டா டபுள் எக்ஸ் உள்ளிட்ட படங்களில் வில்லனாக நடித்த மலையாள நடிகர் ஷைன் டாம் சாக்கோ இதில் இன்னொரு முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கிறார். இந்த படத்திற்கான முன்கட்ட வேலைகள் நடைபெற்று வந்த நிலையில் விரைவில் இந்த படத்தின் படப்பிடிப்பு துவங்க இருப்பதாக தகவல் தற்போது வெளியாகி உள்ளது. இதற்கு முன்னதாக கடந்த மூன்று வருடங்களுக்கு முன்பு நடிகர் நட்டி, மற்றும் நரேனுடன் கதிர் இணைந்து நடித்த யூகி என்கிற படம் தமிழ், மலையாளம் என இரு மொழிகளில் வெளியானாலும் இது அவர் நடிக்கும் நேரடி மலையாள படமாக உருவாகிறது.