டிச., 27ல் மலேசியாவில் ‛ஜனநாயகன்' இசை வெளியீடு | டிசம்பர் 12ல் ரஜினி பிறந்தநாளில் ரீ ரிலீஸ் ஆகும் அண்ணாமலை | ராஜமவுலிக்கு ஆதரவாக குரல் கொடுத்த ராம் கோபால் வர்மா | பிரபல எழுத்தாளர் உடன் கைகோர்க்கும் சந்தானம் | அஞ்சான் படத்தின் நீளத்தை குறைத்த லிங்குசாமி | 26 வருடங்களுக்கு பிறகு ரீ ரிலீஸ் ஆகும் அமர்க்களம் | மீண்டும் கன்னட சினிமாவிற்கு திரும்பிய பிரியங்கா மோகன் | வரி ஏய்ப்பு : நாகார்ஜுனா, வெங்கடேஷ் குடும்ப ஸ்டுடியோக்களுக்கு நோட்டீஸ் | ஜனநாயகன் - தெலுங்கு வியாபாரம் முடிவு | தெலுங்கில் ரீரிலீசாகும் 'பையா' : மீண்டும் பார்க்க கார்த்தி ஆர்வம் |

பாலிவுட்டின் முன்னணி நடிகர்களில் ஒருவர் ஆமிர்கான். சில அற்புதமான ஹிந்தித் திரைப்படங்களையும் தயாரித்தவர். சமீபத்தில் பிரபல ஷோவான கபில் சர்மா நிகழ்ச்சியில் கலந்து கொண்டார். அப்போது இயக்குனர் ஏஆர் முருகதாஸைப் பற்றிப் புகழ்ந்து பேசினார்.
“ஏஆர் முருகதாஸ் வித்தியாசமான ஒரு மனிதர். எந்த ஒரு ஒளிவுமறைவும் அவரிடம் கிடையாது. ஒரு காட்சி பற்றி அவரிடம் நாம் ஒரு ஆலோசனை சொன்னால் அது பற்றிய அவரது கருத்தை வெளிப்படையாகச் சொல்லிவிடுவார். அது நன்றாக இல்லை என்றால், சார் நன்றாக இல்லை என எந்தத் தயக்கமும் இல்லாமல் சொல்வார். அதேசமயம் அந்த ஐடியா சிறப்பாக இருந்தால் சூப்பர் சார், சூப்பர் சார் என்பார். அதிலும் எந்தவித ஒளிவுமறைவும் இருக்காது. இப்படிப்பட்ட நல்ல குணத்தை அவரிடம் இருந்து நான் எடுத்துக் கொண்டேன்,” என்றார்.
ஏஆர் முருகதாஸ் இயக்கத்தில் ஆமிர்கான் நடிப்பில் வெளிவந்த 'கஜினி' படம்தான் ஹிந்தித் திரையுலகத்தின் முதல் 100 கோடி படம் என்பது குறிப்பிடத்தக்கது. தற்போது சிவகார்த்திகேயன் நடிக்க தமிழில் ஒரு படத்தையும், சல்மான்கான் நடிக்க ஹிந்தியில் ஒரு படத்தையும் இயக்கி வருகிறார் ஏஆர் முருகதாஸ்.