பாலிவுட்டின் மூத்த நடிகை காமினி கவுசல் காலமானார் | குடும்பங்கள் கொண்டாடிய படங்களின் இயக்குனர் வி சேகர் காலமானார் | கும்கி 2 படத்தை வெளியிட அனுமதி | பல ஹீரோக்கள் இதை விரும்பமாட்டார்கள் - ஆண்ட்ரியா | ராஷ்மிகாவுக்கு தேசிய விருது நிச்சயம் : தேவிஸ்ரீ பிரசாத் நம்பிக்கை | பெங்களூர் டேஸ் படத்தை ரீமேக் செய்து கெடுத்து விட்டோம் : ராணா | தமிழுக்கு வந்த காந்தாரா 2 பட வில்லன் | அஜித்தை நேரில் சந்தித்த சூரியின் நெகிழ்ச்சி பதிவு | மனைவி ஆர்த்தியின் பிறந்தநாளை கொண்டாடிய சிவகார்த்திகேயன் | மகிழ்திருமேனியின் அடுத்த படம் குறித்து தகவல் இதோ |

எஸ்யு அருண்குமார் இயக்கத்தில், விக்ரம், துஷாரா விஜயன், எஸ்ஜே சூர்யா மற்றும் பலர் நடிப்பில் உருவாகி வரும் படம் 'வீர தீர சூரன்'. இப்படத்தின் படப்பிடிப்பு கடந்த வாரம் ஆரம்பமாகி தற்போது விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது.
இப்படத்தின் படப்பிடிப்பின் முதல் நாளிலிருந்து அப்டேட்டைக் கொடுத்து வருகிறார் படத்தின் கதாநாயகன் விக்ரம். மதுரை அடுத்த மேலூரில் உள்ள கல்லம்பட்டி என்ற கிராமத்தில் இப்படத்தின் படப்பிடிப்பு நடைபெற்று வருகிறது. சுமார் 10 நாட்களுக்கு அங்கு படப்பிடிப்பு நடைபெற உள்ளது.
படப்பிடிப்பின் முதல் நாளன்றே படப்பிடிப்பைப் பார்க்க பொதுமக்கள் கூட்டம் அதிகமாக இருந்துள்ளது. விக்ரம் இப்படி தினமும் படப்பிடிப்பு பற்றிய அப்டேட்டைக் கொடுத்து வந்தால் தினமுமே அங்கு கூட்டம் கூடும்.
கிராமத்துக் கதையாக உருவாகி வரும் 'வீர தீர சூரன்' படம் மீது இப்போதே அதிக எதிர்பார்ப்பு எழுந்துள்ளது.




