2026ம் ஆண்டின் முதல் வெற்றி 25வது நாளில்… | வாய்ப்பை வீணாக்கும் 'லவ் இன்சூரன்ஸ் கம்பெனி' | ஓடிடியில் கடுமையாக டிரோல் செய்யப்படும் 'தி ராஜா சாப்' | ஓடிடியில் வெளியாகும் பொங்கல், சங்கராந்தி படங்கள் | சூர்யாவின் 'கருப்பு': விரைவில் ரிலீஸ் தேதி அறிவிப்பு | 'டாக்சிக்' தெலுங்கு வியாபாரம் 120 கோடி உண்மையா? | வாரணாசி வெளிநாட்டு உரிமை தான் ராஜமவுலியின் சம்பளம்? | ஆபாச தாக்குதல் : ஈஷா ரெப்பா போலீஸில் புகார் | மூன்றாம் பாகத்தோடு திரிஷ்யம் முடிவடைகிறது : ஜீத்து ஜோசப் | துரந்தர் 2 படத்தில் சிறப்பு தோற்றத்தில் நடித்த விக்கி கவுசல், யாமி கவுதம் |

மலையாளத்தில் கடந்த சில தினங்களுக்கு முன்பு பஹத் பாசில் நடிப்பில் வெளியான படம் ஆவேசம். காமெடி கேங்ஸ்டர் படமாக வெளியான இந்த படத்தில் தாதாவாக நகைச்சுவை கலந்த தாதா கதாபாத்திரத்தில் மிக சிறப்பான நடிப்பை வெளிப்படுத்தியுள்ளார் பஹத் பாசில். கல்லூரி ராக்கிங்கில் இருந்து தப்பிப்பதற்காக தங்களுக்கு ஆதரவாக ஒரு தாதாவை கண்டுபிடிக்கும் சில மாணவர்கள் அதன்பின் அவரின் அன்புப்பிடியில் சிக்கிக் கொண்டு படும் அவஸ்தைகள் தான் மொத்த படமும். கலகலப்பான இந்த படத்தை இயக்குனர் ஜித்து மாதவன் இயக்கியுள்ளார்.
சமீபத்தில் இந்த படத்தை பார்த்துவிட்டு இயக்குனர் விக்னேஷ் சிவன் பஹத் பாசில் நடிப்பை பாராட்டும்போது வேற்று கிரகத்தில் இருந்து வந்த மனிதர் நீங்கள் என்று கூறியிருந்தார். இந்த நிலையில் நடிகை சமந்தாவும் ஆவேசம் படத்தை பார்த்துவிட்டு தனது பாராட்டுகளை வெளிப்படுத்தியுள்ளார். இது குறித்து தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் சமந்தா அடுத்தடுத்து வெளியிட்டுள்ள பதிவுகளில், ஆவேசம் படம் பார்த்த ஹேங் ஓவரில் இருப்பதாகவும் படத்தின் இசையமைப்பாளர் சுசின் பிரசாத் ஒரு ஜீனியஸ் என்றும் பாராட்டுக்களை தெரிவித்துள்ளார்.
சமந்தாவும், பஹத் பாசிலும் இதற்கு முன்னதாக தியாகராஜன் குமாரராஜா இயக்கத்தில் வெளியான சூப்பர் டீலக்ஸ் படத்தில் ஜோடியாக நடித்திருந்தனர் என்பது குறிப்பிடத்தக்கது.




