இறுதி கட்டத்தில் 'லவ் மேரேஜ்' | பிளாஷ்பேக் : இந்தியன் பனோரமாவில் திரையிடப்பட்ட முதல் தமிழ்படம் | பிளாஷ்பேக் : லலிதா, பத்மினிக்காக காத்திருந்த ரசிகர்கள் | ஆஸ்கர் விருது வரை சென்ற 'லபாட்டா லேடீஸ்' படம் கதை காப்பி சர்ச்சையில் சிக்கியது | சினிமா ஆனது இந்தியாவின் முதல் மகாத்மாவின் வாழ்க்கை | 'பயர்' 50வது நாள் : சவாலான படங்களை தயாரித்து, இயக்க ஜே சதீஷ் குமார் முடிவு | ரத்தத்தால் அடா சர்மாவின் ஓவியம் வரைந்த ரசிகர் | விவாகரத்து பெற்றுவிட்டேன் : வெளிப்படையாக அறிவித்த மம்முட்டி பட பெண் இயக்குனர் | லூசிபர் 3ம் பாகத்தின் டைட்டில் இதுதான் : இசையமைப்பாளர் சூசக தகவல் | நான் யார் என்று எனக்கே தெரியவில்லை : மணிரத்னம் பட நடிகை அதிர்ச்சி தகவல் |
ரீ-ரிலீஸ் படங்கள் என்ற டிரெண்ட் சமீபகாலத்தில் பரபரப்பாகப் பேசப்பட்டு வருகிறது. கடந்த வாரம் வெளியான 'கில்லி' படம் இரண்டு நாட்களில் சுமார் 10 கோடி வசூலைக் கடந்து சாதனை படைத்துள்ளது.
இம்மாதிரியான ரீ-ரிலீஸ் படங்களால் வாராவாரம் வெளியாகும் சிறிய படங்களுக்கு பாதிப்பு ஏற்படுகிறது என்ற குரல் தற்போது எழுந்துள்ளது. இந்த வருடத்தின் இந்த நான்கு மாதங்களில் 75க்கும் மேற்பட்ட படங்கள் வெளியாகி உள்ளது. இவற்றில் 5 படங்கள்தான் முன்னணி நடிகர்கள் நடித்த படங்கள். மற்ற 70 படங்களுமே சிறிய பட்ஜெட் படங்கள்தான்.
இந்தப் படங்களுக்குத் தியேட்டர்கள் கிடைப்பதில் கடும் சிரமம் ஏற்பட்டுள்ளது. அப்படியே கிடைத்தாலும் ஓரிரு காட்சிகள் மட்டுமே கிடைத்துள்ளது. அதே சமயம் ரீ-ரிலீஸ் ஆன சில முன்னணி நடிகர்களின் படங்களுக்கு வார இறுதி நாட்களில் ரசிகர்களிடம் வரவேற்பு இருப்பதால் அந்தப் படங்களுக்கே தியேட்டர்காரர்கள் முன்னுரிமை கொடுத்தார்களாம்.
அதனால், சில சுமாரான படங்கள் கூட லட்சங்களைத் தாண்டி வசூலிக்கவில்லையாம். மேலும், ரீ-ரிலீஸ் படங்களைத் திரையிடுவதால் தியேட்டர்காரர்களுக்கே அதிக லாபம் என்கிறார்கள். வசூலாகும் தொகையில் அவர்கள் 70 சதவீதத்திற்கு மேல் எடுத்துக் கொள்கிறார்களாம். மீதி 30 சதவீதம் மட்டுமே படத்தை வினியோகிப்பவர்களுக்குப் போகிறதாம். மேலும், கேண்டீன் வருவாய், பார்க்கிங் உள்ளிட்ட வருவாய்களால் தியேட்டர்காரர்களும் ரிரிலீஸ் படங்களைத் திரையிடுவதில் ஆர்வம் காட்டுகிறார்களாம்.
இந்த வாரம் முதல் ரீ-ரிலீஸ் படங்களின் வருகை குறைய வாய்ப்புள்ளது என்று நம்புகிறார்கள். இந்த வாரத்தில் விஷால் நடித்துள்ள 'ரத்னம்', அடுத்த வாரம் சுந்தர் சியின் 'அரண்மனை 4', அதற்கடுத்த வாரம் சந்தானத்தின் 'இங்கு நான்தான் கிங்கு', கவினின் 'ஸ்டார்' ஆகிய படங்கள் வெளியாக உள்ளன. அதே சமயம் அஜித் நடித்துள்ள 'மங்காத்தா' படத்தை மே 1ம் தேதிக்கு ரீ-ரிலீஸ் செய்ய உள்ளார்கள்.
புதிய படங்களின் வருகை அதிகமானால் ரிரிலீஸ் படங்களின் வெளியீடும் குறைய வாய்ப்புள்ளது என்று கோலிவுட்டில் தெரிவிக்கிறார்கள்.