மீண்டும் இணையும் விஜய் சேதுபதி - தியாகராஜன் குமாரராஜா! நாளை பர்ஸ்ட் லுக்! | 'துரந்தர்' 2ம் பாகத்தை ஆவலுடன் எதிர்பார்க்கிறேன்! - பாலிவுட் நடிகர் ரன்பீர் கபூர் | 'இருமுடி' படத்தில் காவேரி ஆக பிரியா பவானி சங்கர்! | பாலகிருஷ்ணா 111வது படத்தில் நயன்தாரா மாற்றமில்லை! | நானி, வெங்கி அட்லூரி கூட்டணி படத்தின் கதாநாயகி யார் தெரியுமா? | பான் இந்தியா படங்களோடு மோதும் கென் கருணாஸின் 'யூத்' | மீண்டும் விஜய் பட தலைப்பில் புதிய பட அறிவிப்பு! | "எமோ எமோ இதி" ரோசன் மெக்கா, பிரீத்தி முகுந்தன் புதிய தெலுங்கு பட அறிவிப்பு! | "மகான் 2ம் பாகம் உருவாகிறது" - கார்த்திக் சுப்பராஜ் தகவல்! | சிவகார்த்திகேயன் படத்தில் கதாநாயகி, இசையமைப்பாளர் யார் தெரியுமா? |

தமிழ் சினிமாவின் முன்னணி பின்னணி பாடகி எஸ்.ஜானகி. இளையராஜாவின் இசையில் அதிகமான பாடல்களை பாடி உள்ளதால் ஜானகியை இளையராஜாதான் அறிமுகப்படுத்தினார் என்று பலரும் கருதிக் கொண்டிருக்கிறார்கள். ஆனால் எஸ்.ஜானகியை அடையாளம் கண்டு அறிமுகப்படுத்தியவர் தஞ்சை மாவட்டம் வேதாந்தபுரத்தைச் சேர்ந்த இசையமைப்பாளர் ரங்கசாமி பார்த்தசாரதி என்ற ஆர்.பார்த்தசாரதி.
டி.எஸ்.பாலையா தயாரிப்பில் 1957ம் ஆண்டு வெளியான 'மகதலநாட்டு மேரி' படத்தில் பி.பி.ஸ்ரீனிவாசுடன் இணைந்து எஸ்.ஜானகி பாடினார். எஸ்.ஜானகிக்கு முதல் டூயட் பாடலும் இதுதான். “கண்ணுக்கு நேரே மின்னிடும் தாரை தன் உருமாறி வந்து தேன் மாரி பெய்யுதே...” இந்தப் பாடல் மூலமே தமிழ்த் திரை உலகில் எஸ்.ஜானகி நுழைந்தார்.
பார்த்தசாரதி இசை அமைத்த பாடல்கள் அனைத்தும் ஹிட்டானது. ஆனாலும் அவருக்கு ஏனோ தொடர்ந்து வாய்ப்புகள் கிடைக்கவில்லை. 12 வருடங்கள் இசை அமைப்பாளராக இருந்த அவர் 20 படங்கள்வரைதான் இசை அமைத்தார். அதன்பிறகு அமெரிக்காவுக்கு சென்று செட்டிலாகிவிட்டார். அங்கு ஓரியண்டல் ரெக்கார்ட்ஸ் இன் என்ற இசை வெளியீட்டு நிறுவனத்தை தொடங்கி சிதார் ரவிசங்கர், வீணை எஸ்.பாலச்சந்தர், கே.ஜே.ஜேசுதாஸ் போன்ற கலைஞர்களது இசைவடிவங்களை ஒலிவடிவங்களாக வெளியிட்டார்.