பிப்-20ல் வெளியாகும் பிரியாமணி மலையாள படம் | எனக்கு அரெஸ்ட் வாரண்டா ? பொய் பரப்புவோர் மீது சோனு சூட் காட்டம் | ஆஸ்தான நடிகரையும் மோகன்லால் படத்தில் இணைத்துக் கொண்ட ஆவேசம் இயக்குனர் | வேட்டையன் படத்தில் சம்பளம் வாங்காமல் நடித்தேன் ; மலையாள நடிகர் அலான்சியர் லே | பிரதமர் மோடிக்கு நடன பொம்மைகளை பரிசளித்த நாகசைதன்யா - சோபிதா தம்பதி | தமிழில் வெப் தொடர் அறிமுகமாகிறார் ஜான்வி கபூர்! | போர் தொழில் இயக்குனரின் கதையில் அசோக் செல்வன்! | டாக்சிக் படத்தின் புதிய அப்டேட்! | பாலகிருஷ்ணாவிற்கு வில்லனாக ஆதி! | சிம்புவிற்கு ஜோடியாகும் சாய் பல்லவி! |
தமிழ் சினிமாவின் பிரபலமான இயக்குனரான ஏ.ஆர்.முருகதாஸ். தமிழைத் தாண்டி ஹிந்தியில் கஜினி, ஹாலிடே, அகிரா ஆகிய வெற்றி படங்களை இயக்கி அங்கும் முத்திரை பதித்தார். தற்போது தமிழில் சிவகார்த்திகேயன் நடிப்பில் ஒரு படத்தை இயக்கி வருகிறார். இதன் படப்பிடிப்பு நடந்து வருகிறது. இதுதவிர ஹிந்தியில் சல்மான் கான் நடிப்பில் ஒரு படத்தை இயக்குவதாக சமீபத்தில் அறிவித்தனர். சஜித் நாடியாவாலா இதனை தயாரிக்கிறார். தற்போது இந்த படத்திற்கு 'சிக்கந்தர்' என தலைப்பு வைத்துள்ளதாக ரமலான் பண்டிகையான இன்று அறிவித்துள்ளனர். அதோடு இந்தப்படம் அடுத்தாண்டு ரமலான் பண்டிகையில் வெளியாகும் எனவும் தெரிவித்துள்ளனர்.