விக்ரம் 63வது படத்தை இயக்கும் அறிமுக இயக்குனர் | என்னுடைய டேஸ்ட்டே வேற! சொல்கிறார் ஸ்ரீ லீலா | கவுரி கிஷனின் பேராசை | திரையரங்குகளில் வசூலை வாரி குவிந்த படங்கள்....இந்த வார ஓடிடி ரிலீஸ்.......! | மாத செலவுக்கு ரூ.6.5 லட்சம் மாதம்பட்டி ரங்கராஜ் தர வேண்டும்; ஜாய் கிரிசில்டா மனு | ராஷ்மிகாவுக்கு ஜோடியாக கன்னட நடிகர் ஏன் ? ; 'தி கேர்ள் பிரண்ட்' இயக்குனர் விளக்கம் | மகேஷ் பாபு குடும்பத்திலிருந்து ஒரு கதாநாயகி | தொடர்ந்து தெலுங்கு இயக்குநர்களிடம் கதை கேட்கும் சூர்யா | லோகேஷ் கனகராஜ் ஜோடியான வாமிகா கபி | மீண்டும் ரஜினியுடன் இணையும் சந்தானம் |

கடந்த பிப்ரவரி மாதம் மலையாளத்தில் வெளியான மஞ்சும்மேல் பாய்ஸ் திரைப்படம் கேரளாவில் மட்டுமல்லாது தமிழ்நாட்டிலும் வெளியாகி மிகப்பெரிய வரவேற்பு பெற்றது. இதுவரை மலையாள சினிமாவில் 200 கோடி வசூலித்த முதல் படம் என்கிற பெருமையும் இந்த படம் பெற்றது. இந்த படத்தில் நடித்த பத்து இளைஞர்களில் ஓரிருவர் தான் ஏற்கனவே ரசிகர்களுக்கு அறிமுகமானவர்கள். மீதி உள்ளவர்கள் அனைவருமே இந்த மஞ்சும்மேல் பாய்ஸ் படம் மூலமாக வெளிச்சம் பெற்றுள்ளார்கள் என்றே சொல்லலாம்.
அதிலும் இந்த படத்தில் குணா குகைக்குள் விழும் கதாபாத்திரத்தில் நடித்திருந்த ஸ்ரீநாத் பாஷிக்கு இந்த படத்தின் வெற்றியானது தமிழில் பா ரஞ்சித் தயாரிப்பில் அகிரன் மோசஸ் இயக்கத்தில் ஜி.வி பிரகாஷ் நடிக்கும் படத்தில் முக்கிய நேரத்தில் நடிக்கும் வாய்ப்பை பெற்று தந்தது. இதையடுத்து இந்த படத்தில் நடித்த இன்னொரு இளம் நடிகரான தீபக் பரம்போள் என்பவர் நித்யா மேனன் கதாநாயகியாக நடிக்க தமிழில் உருவாகும் டியர் எக்சஸ் என்கிற படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்க ஒப்பந்தமாகி உள்ளார்.
நிவின் பாலி கதாநாயகனாக அறிமுகமான தட்டத்தின் மறையத்து படத்தில் தான் இவரும் ஒரு நடிகராக அறிமுகமானார். இத்தனை வருடம் கழித்து மஞ்சும்மேல் பாய்ஸ் படம் மூலம் பிரபலமான இவர், சமீபத்தில் பீஸ்ட் பட நடிகை அபர்ணா தாஸை திருமணம் செய்ய இருப்பதாக வெளியான நிச்சயதார்த்த செய்தியால் இன்னும் பிரபலமானவர் என்பது குறிப்பிடத்தக்கது.
 
           
             
           
             
           
             
           
            