'பைசன்' படத்திற்கு முதல்வர் ஸ்டாலின் பாராட்டு | ஆதங்கத்துடன் புலம்பும் முகமூடி நடிகை | நடிகர்களுக்கு அதிர்ச்சி கொடுக்கும் நடிகை | மலையூரு நாட்டாமை மனச காட்டு பூட்டாம..: ‛டூரிஸ்ட் பேமிலி' கமலேஷ் | அனுபமாவின் அனுபவம் | 59 நாட்களில் தமிழ் கற்றேன்: ‛செம்பருத்தி பூ' ஸ்வாதி | நான் ஏன் பிறந்தேன், முத்து, மார்கன் - ஞாயிறு திரைப்படங்கள் | மீண்டும் விளையாட்டு படத்தை கையில் எடுக்கும் அருண் ராஜா காமராஜ் | ஹிந்தி நடிகர் சதீஷ் ஷா காலமானார் | தனுஷ் தம்பியாக நடிக்க வேண்டியது : விஷ்ணு விஷால் |

தமிழ் சினிமாவில் முன்னணி நடிகராக இருப்பவர் தனுஷ். தமிழை தாண்டி ஹிந்தி, ஹாலிவுட் வரை நடித்து விட்டார். தமிழ் சினிமாவின் உச்ச நடிகர் ரஜினியின் மூத்த மகள் ஐஸ்வர்யாவை கடந்த 2004ல் இவர் திருமணம் செய்து கொண்டார். ஐஸ்வர்யாவும் சினிமாவில் இயக்குனராக வலம் வருகிறார். இவர்களுக்கு லிங்கா, யாத்ரா என இரண்டு மகன்கள் உள்ளனர்.
குடும்ப வாழ்க்கை நன்றாக சென்று கொண்டிருந்த நிலையில் இருவருக்கும் இடையே மனகசப்பு ஏற்பட்டு, கடந்த 2022ல் தாங்கள் பிரிவதாக தனுஷ், ஐஸ்வர்யா அறிவித்தனர். இவர்களை சேர்த்து வைக்க குடும்பத்தினர் முயற்சித்து வந்தனர். இந்நிலையில் இருவரும் பரஸ்பர விவாகரத்து கேட்டு சென்னை ஐகோர்ட்டில் உள்ள குடும்பநல நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்துள்ளனர். இந்த வழக்கு விரைவில் விசாரணைக்கு வர உள்ளது.
எப்படியும் இருவரும் சேர்ந்து வாழ்வர் என இரு குடும்பத்தாரும் எதிர்பார்த்த நிலையில் இவர்களின் இந்த முடிவு குடும்பத்தினர் மற்றும் அவர்களது ரசிகர்கள் இடையே அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.