பிப்-20ல் வெளியாகும் பிரியாமணி மலையாள படம் | எனக்கு அரெஸ்ட் வாரண்டா ? பொய் பரப்புவோர் மீது சோனு சூட் காட்டம் | ஆஸ்தான நடிகரையும் மோகன்லால் படத்தில் இணைத்துக் கொண்ட ஆவேசம் இயக்குனர் | வேட்டையன் படத்தில் சம்பளம் வாங்காமல் நடித்தேன் ; மலையாள நடிகர் அலான்சியர் லே | பிரதமர் மோடிக்கு நடன பொம்மைகளை பரிசளித்த நாகசைதன்யா - சோபிதா தம்பதி | தமிழில் வெப் தொடர் அறிமுகமாகிறார் ஜான்வி கபூர்! | போர் தொழில் இயக்குனரின் கதையில் அசோக் செல்வன்! | டாக்சிக் படத்தின் புதிய அப்டேட்! | பாலகிருஷ்ணாவிற்கு வில்லனாக ஆதி! | சிம்புவிற்கு ஜோடியாகும் சாய் பல்லவி! |
லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் ரஜினிகாந்த் நடிக்க இருக்கும் அவரது 171வது படம் குறித்த அறிவிப்பு வெளியாகி, அவ்வப்போது அதன் அப்டேட்டுகளையும் லோகேஷ் கனகராஜ் கொடுத்து வருகிறார். சமீபத்தில் இந்த படத்தில் ரஜினிகாந்தின் கேரக்டர் லுக் குறித்த ஒரு போஸ்டர் ஒன்றும் வெளியாகி எதிர்பார்ப்புகளை அதிகப்படுத்தியுள்ளது.
இந்த படத்தில் ரஜினிகாந்த் தவிர மற்ற யாரெல்லாம் நடிக்கிறார்கள் என ஒருவர் பெயர் கூட இன்னும் வெளியாகவில்லை. இந்த நிலையில் இந்த படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் நடிப்பதற்காக பாலிவுட் நடிகர் ரன்வீர் சிங்கை அணுகி கதை சொல்லி இருக்கிறாராம் லோகேஷ் கனகராஜ்.
அனேகமாக அது வில்லன் கதாபாத்திரமாக இருக்கும் என்று சொல்லப்படுகிறது. இது பற்றிய அதிகாரப்பூர்வ தகவல் எதுவும் வெளியாக விட்டாலும் ஜெயிலர் படத்தில் யாரும் எதிர்பாராத விதமாக மோகன்லால், சிவராஜ்குமார் என ஒவ்வொரு திரையுலகில் உள்ள பிரபலங்கள் கெஸ்ட் ரோலிலேயே நடித்த ஆச்சரியமெல்லாம் நடந்தது. அதிலும் இப்போது லோகேஷ் கனகராஜ், ரஜினி என்கிற காம்பினேஷனில் உருவாகும் இந்த படத்தில் எது வேண்டுமானாலும் நடக்க வாய்ப்பு இருக்கிறது என்று தாராளமாக எதிர்பார்க்கலாம்.