என் அப்பா இன்ஸ்டாகிராமில் இருக்கிறாரா? : கல்யாணி பிரியதர்ஷன் ஆச்சர்யம் | எட்டு மாதம் கழித்து கேரளா திரும்பிய மம்முட்டி | தலைப்பிற்காக அழையும் படக்குழு! | ஜாய் கிரிசில்டாவுக்கு ஆண் குழந்தை பிறந்தது | வித்யாசாகர் மகனுக்கு ஜோடி யார் தெரியுமா? | ஜனவரி 23ல் திரைக்கு வருகிறதா சூர்யாவின் கருப்பு? | சிரஞ்சீவிக்கு ஜோடியாக நடிக்கவில்லை : மாளவிகா மோகனன் | சூர்யா 47வது படத்தில் மலையாள நட்சத்திர பட்டாளம் | இது பாகுபலி 3 இல்லை : ராஜமவுலி வெளியிட்ட தகவல் | ஆல்கஹாலை விளம்பரப்படுத்த மறுத்ததால் வந்த சிக்கல் : ரவி மோகன் |

விடுதலை படத்தின் இரண்டாம் பாகத்தை  இயக்கி வரும் வெற்றிமாறன், மா.பொ.சி என்ற படத்தை தனது நிறுவனத்தின் சார்பில் வெளியிடுகிறார். கன்னி மாடம் என்ற  படத்தை இயக்கிய நடிகர் போஸ் வெங்கட் இயக்கும் இந்த படத்தில் விமல் நாயகனாக நடிக்கிறார்.  தற்போது மா.பொ.சி படத்தின் பர்ஸ்ட் லுக் போஸ்டர் வெளியிடப்பட்டுள்ளது. அந்த போஸ்டரில் வகுப்பறையில் உள்ள கரும்பலகையில் சாக்பீசால்  எழுதிக் கொண்டிருக்கிறார் விமல். இதை வைத்து பார்க்கும் போது அவர் படத்தில் ஆசிரியராக நடிப்பது தெரிகிறது. அதோடு அவரது பின்னணியில் பாரதியார், திருவள்ளுவர் புகைப்படங்களும் இடம் பெற்றுள்ளது. குறிப்பாக, விமலின்  முகத்தில் அடிபட்ட தழும்புகள் ரத்தம்  வழிந்த நிலையில் உள்ளன. இப்படம் தமிழ், தெலுங்கு, கன்னடம், மலையாளம் என நான்கு மொழிகளில் வெளியாகிறது. 
 
           
             
           
             
           
             
           
            