லாயராக அதுல்யா ரவி, மீனவனாக நான் : டீசல் ரகசியம் சொல்லும் ஹரிஷ் கல்யாண் | காதல், நகைச்சுவை கதைகளில் நடிக்க ஆர்வமாக இருக்கும் ருக்மணி வசந்த் | விண்வெளியில் நான்காவது திருமணம் செய்கிறாரா ஹாலிவுட் நடிகர் டாம் குரூஸ் | அஜித் 64வது படத்தின் அறிவிப்பு எப்போது? : ஆதிக் ரவிச்சந்திரன் தகவல் | ஓடிடிக்கு வருகிறது லோகா சாப்டர் 1 | டியூட் படத்தில் பிரதீப் பாடிய ‛சிங்காரி' பாடல் வெளியானது | தனுஷ் படத்தின் நாயகி யார்... நீடிக்கும் குழப்பம்? | ஜீவா, ராஜேஷ் படத்தில் இணையும் ரம்யா ரங்கநாதன் | ‛பேராண்டி' படத்தில் மனோரமா பாடிய கடைசி பாடல் | 'பைசன்' என் முதல் படம் மாதிரி: துருவ் விக்ரம் |
தமிழ் சினிமா உலகம் இதுவரை பார்க்காத அளவிற்கு கடந்த சில மாதங்களாக ரீ-ரிலீஸ் படங்களின் எண்ணிக்கை அதிகமாகி வருகிறது. இது தற்போது ஒரு டிரெண்டாகவே மாறிவிட்டது.
இந்த 2024ம் ஆண்டில் இதுவரை வெளிவந்த நேரடி புதிய தமிழ்ப் படங்கள் எதுவும் சொல்லிக் கொள்ளும்படியான லாபத்தைத் தரவில்லை. இப்படி ஒரு நிலைமை வேறு எந்த வருடத்திலும் நடந்ததில்லை. பொங்கலுக்கு வெளிவந்த படங்களும் ஏமாற்றின. அடுத்து தமிழ் வருடப் பிறப்பிலும் பெரிய படங்கள் எதுவும் வரவில்லை.
ஆனால், வாராவாரம் ரீ-ரிலீஸ் படங்களை வெளியிட பல தியேட்டர்காரர்கள் ஆர்வம் காட்டுகிறார்கள். யதேச்சையாக ஆரம்பமான இந்த ரீ-ரிலீஸ் தற்போது ரெகுலராக மாறிவிட்டது. தற்போது கூட கார்த்தி நடித்து வெளிவந்த 'பையா', விஜய் நடித்து வெளிவந்த 'கில்லி' ஆகிய படங்களின் ரீ-ரிலீஸ்களை அறிவித்துள்ளார்கள்.
முன்பெல்லாம் ரீரிலீஸ் படங்களை திரையிடுவதற்கென்றே தனி தியேட்டர்கள் இருக்கும். அங்கு எப்போதுமே பழைய எம்ஜிஆர், சிவாஜி ஆகியோரது படங்கள், அதிக நாட்கள் ஓடிய மற்ற நடிகர்களது படங்கள் வெளியாகும். ஆனால், இப்போது மல்டிபிளக்ஸ் தியேட்டர்களில் கூட ரீ-ரிலீஸ் படங்களை வெளியிட ஆரம்பித்துவிட்டார்கள்.
ஒரு பக்கம் ஹிட்டான பழைய படங்களை மீண்டும் தியேட்டர்களில் பார்ப்பது சிறப்புதான் என்றாலும், அதன் தாக்கம் புதிய படங்களையும் பாதிக்கிறது. அதனால், புதிய படங்களுக்கு தியேட்டர்கள் கிடைப்பதில் சிக்கல் ஏற்படுகிறது. புதிய படங்களை விட பழைய படங்களைத் திரையிடுவதன் மூலம் நல்ல லாபமும் கிடைக்கிறது என தியேட்டர்காரர்கள் சொல்கிறார்கள்.
முன்னணி நடிகர்களின் படங்கள் எதுவும் வராத காரணத்தால் இன்னும் சில வாரங்களுக்கு இப்படியான ரீ-ரிலீஸ் டிரெண்ட் இருக்கும். முன்னணி நடிகர்களின் படங்கள் வந்துவிட்டால் ரீ-ரிலீஸை விட்டுவிடுவார்கள் என்றும் பாக்ஸ் ஆபீஸ் வட்டாரங்களில் தெரிவிக்கிறார்கள்.