விஜயை விமர்சித்த நடிகையின் அனலி பட ரிசல்ட்? | சூரி படத்தின் பட்ஜெட் 75 கோடியா? | பத்து கோடியை தொட்ட சிறை | ஜனநாயகன் டிக்கெட் புக்கிங் எப்போது தெரியுமா? | ரஜினியை இயக்கும் ‛டான்' இயக்குனர் : 2027 பொங்கலுக்கு ரிலீஸ் | 'ஜனநாயகன்' டிரைலர் : எதிர்பார்ப்புகள் என்ன ? | தமிழில் முதல் வெற்றியைப் பெறுவாரா பூஜா ஹெக்டே ? | இன்று ஒரே நாளில் மூன்று முக்கிய வெளியீடுகள் | சிவகார்த்திகேயனுக்கு கண்டனம் தெரிவித்த சிவாஜி சமூக நலப்பேரவை | பொங்கல் போட்டியில் முக்கிய கதாநாயகிகள் |

'இதற்குத்தானே ஆசைப்பட்டாய் பாலகுமாரா' இயக்குனர் கோகுல் கடந்த சில வருடங்களுக்கு முன்பு அதாவது கொரோனா காலகட்டத்தில் சிம்புவை வைத்து ‛கொரோனா குமார்' என்கிற படத்தை இயக்குவதாக அறிவிப்பை வெளியிட்டார். ஆனால் அதன் பிறகு அந்த படம் வெறும் அறிவிப்பாகவே நின்று விட்டது. இந்த நிலையில் சிம்புவுக்கு பதிலாக அந்த படத்தில் விஷ்ணு விஷால் நடிக்கிறார் என்றும் அறிவிப்பு வெளியானது. மேலும் இந்த படத்தின் டைட்டிலில் சிறிது மாற்றம் செய்து 'வைப் குமார்' என புதிய டைட்டில் வைத்துள்ளதாகவும் ஒரு தகவல் வெளியானது.
தற்போது இந்த படத்தில் கதாநாயகியாக அதிதி ஷங்கர் நடிக்க உள்ளார் என்கிற தகவலும் சோசியல் மீடியாவில் கசிந்துள்ளது. ஏற்கனவே தான் இயக்கிய இதற்குத்தானே ஆசைப்பட்டாய் பாலகுமாரா படத்தின் இரண்டாம் பாகத்தை உருவாக்குவதற்காக கதை தயார் செய்து வந்ததாகவும், அதைத்தான் தற்போது கொஞ்சம் மாற்றி வைப் குமார் என்கிற பெயரில் கோகுல் இயக்க இருப்பதாகவும் சொல்லப்படுகிறது.