'மாரீசன்' படம் ஜூலை 25ல் வெளியாகிறது | ராஜமவுலி படம் மூலம் இந்திய திரையுலகிற்கு திரும்புவது உற்சாகம் : பிரியங்கா சோப்ரா | 7500 தியேட்டர்களில் வெளியாகும் வார் 2 | கால வரையறையின்றி ஒத்திவைக்கப்பட்ட அனுஷ்காவின் ‛காட்டி' | ஹீரோவாகும் ‛டூரிஸ்ட் பேமிலி' இயக்குனர் அபிஷன் ஜீவிந்த் | வேள்பாரி நாவலில் ரஜினிகாந்த்? | பாராட்டுக்கள் கிடைத்தும் வசூலை அள்ளாத 'கண்ணப்பா' | 50வது நாளைக் கடந்த 'மாமன்', நன்றி தெரிவித்த சூரி | ஹரிஹர வீரமல்லு : யு டியூபில் மட்டும் 60 மில்லியன் பார்வைகள் | 'சப்தம்' படத்தை ஓடிடியில் வெளியிட நீதிமன்றம் தடை |
நடிகர் ரோபோ சங்கர் மகள் இந்திரஜாவுக்கும் அவருடைய மாமா கார்த்திக்கிற்கும் கடந்த வாரம் கோலாகலமாக திருமணம் நடந்தது. இதன் வீடியோக்கள் இணையத்தில் வைரலான நிலையில் பலர் மோசமாக கமெண்ட் செய்துள்ளனர். இதனையடுத்து இதற்கு பதிலளித்த ரோபோ சங்கர், ‛ஆரம்பத்தில் நான் எவ்வளவு வலி வேதனையோடு போராடி வெற்றி பெற்றேன். .என்னுடைய உழைப்பால் தான் நான் இன்று இந்த அளவிற்கு வளர்ந்து இருக்கிறேன். நான் என் வாழ்க்கையை என்ஜாய் செய்கிறேன். ஒரே பொண்ணு அவ கல்யாணத்தை எனக்கு பிடித்தவாறு நடத்துகிறேன். இவ்வளவு செய்கிறார்கள் ஆனால், ஒரு வருஷத்தில் பிரிந்து போய்விடுவார்கள் என்று சொல்கிறார்கள்' என்று வருத்தத்துடன் பேசியுள்ளார்.
அதன்பின் பேசிய ரோபோ சங்கரின் மருமகன், 'நாங்கள் உழைத்த பணத்தை வைத்து என்ஜாய் செய்கிறோம். அதில் சிலருக்கு என்ன கஷ்டம் வந்தது என்று தெரியவில்லை. சிலர் பொறாமையினால் தான் தப்பு தப்பா கமெண்ட் போடுறாங்க' என்று பேசியுள்ளார்.