பிரபாஸ் படத்திலிருந்து நீக்கப்பட்டாரா ராஷ்மிகா? | விஜய் சேதுபதி படத்தில் தபு : அதிகாரப்பூர்வ அறிவிப்பு | கண்ணப்பா படத்தின் புதிய ரிலீஸ் தேதி அறிவிப்பு | 'ரெட்ரோ'வில் 90களின் காதல் கதை : கார்த்திக் சுப்பராஜ் தகவல் | பிளாஷ்பேக் : இளையராஜாவின் பாடலுக்காக உருவான படம் | சினிமா சங்கப் பிரச்னைகளில் அரசு தலையிட வேண்டும் : ஆர்கே செல்வமணி கோரிக்கை | உறுதியானது 'லியோ - குட் பேட் அக்லி' ஒற்றுமை | தனுஷ் - மாரி செல்வராஜ் கூட்டணி : மாறிய தயாரிப்பு நிறுவனம் | ஷங்கர் வழியில் எக்ஸ் தளத்தை 'ஆப்' செய்த ஏஆர் முருகதாஸ் | ஆளே இல்லாத வீட்டிற்கு ஒரு லட்சம் கரண்ட் பில் : கங்கனா ஏற்படுத்திய பரபரப்பு |
பிரித்விராஜ் நடிப்பில் இயக்குனர் பிளஸ்சி இயக்கத்தில் மலையாளத்தில் உருவாகியுள்ள படம் 'ஆடுஜீவிதம்'. ஏ.ஆர் ரஹ்மான் இசையமைத்துள்ள இந்த படத்தில் அமலாபால் கதாநாயகியாக நடித்துள்ளார். நாளை (மார்ச் 28) இப்படம் தென்னிந்திய மொழிகள் மற்றும் ஹிந்தியிலும் சேர்த்து வெளியாக இருக்கிறது. இந்த நிலையில் இன்று சென்னையில் இந்த படத்தின் சிறப்புக்காட்சி திரையிடப்பட்டது. இதில் நடிகர் கமல்ஹாசன், இயக்குனர் மணிரத்னம் ஆகியோர் கலந்துகொண்டு ஆடு ஜீவிதம் படத்தை பார்த்து ரசித்தனர். படத்தைப் பார்த்துவிட்டு வெளியே வந்த கமல் படம் குறித்து தனது வியப்பை வெளிப்படுத்தினார்.
கமல் பேசும்போது, “இயக்குனர் பிளஸ்சிக்கு நன்றி. இது உண்மையிலேயே ஒரு கடின உழைப்பு.. யாரோ ஒருவருக்கு நடந்திருக்கிற விஷயம் தான். மணிரத்னம் கூட எப்படி இதற்காக நீங்கள் உழைத்தீர்கள் என ஆச்சரியப்பட்டார். படத்தின் இடைவேளையின் போது இன்னும் அதிகமாக தண்ணீர் குடிக்க வேண்டும் என்கிற உணர்வு ஏற்பட்டது. பிரித்விராஜ் மிகப்பெரிய அளவில் அதிலும் குறிப்பாக அந்த குளிக்கும் காட்சியில் பிரமிக்க வைத்துள்ளார்.
இவ்வளவு தூரத்திற்கு அவர் செல்வார் என நான் ஒருபோதும் நினைத்ததில்லை. ஒளிப்பதிவாளர் (சுனில் கே.எஸ்) பணி உண்மையிலேயே கடினமானது. படைப்பாளிகளாக நாங்கள் புரிந்து கொள்கிறோம். மக்களும் இதை புரிந்து கொள்ள வேண்டுமென விரும்புகிறோம். அருமையான படம். இந்த படத்திற்கு மக்கள் தங்கள் ஆதரவை தர வேண்டும்” என்று கூறியுள்ளார்.
இயக்குனர் மணிரத்னம் இந்த படம் குறித்து தனது பாராட்டை வெளிப்படுத்தும் போது, “வியக்கத்தக்க, மூச்சை இழுத்து பிடிக்கின்ற வகையிலான காட்சிகள் மற்றும் பிரித்திவிராஜ் அற்புதமான பணியை இதில் செய்துள்ளார்'' என்று பாராட்டியுள்ளார்.