நான் கார்த்தியின் தீவிர ரசிகை : கிர்த்தி ஷெட்டி | இன்னும் 50 நாள் : பராசக்தி புதிய போஸ்டர் வெளியீடு | ஆர்யன் படம் வருகிற 28-ல் நெட்பிளிக்சில் வெளியாகிறது | ஜாய் கிறிஸ்டில்லாவுக்கு எதிராக மாதம்பட்டி ரங்கராஜ் தொடுத்த வழக்கை தள்ளுபடி செய்த நீதிமன்றம் | சிம்பு கதையில் ரஜினியா... | ஆண் பாவத்திற்கு பொல்லாதது பின் தமிழ் சினிமா நிலைமை பாவம் | அது நானில்லை : ரகுல் ப்ரீத் சிங் எச்சரிக்கை | தன் பட பூஜையை அர்ஜூன் தாஸ் புறக்கணித்தாரா? | தமிழில் மெலோடி பாடல்கள் குறைந்தது ஏன்?: கங்கை அமரன் | ஹிந்தியில் மீண்டும் தடம் பதிப்பாரா தனுஷ்? |

கடந்த 2014ம் ஆண்டு சுந்தர்.சி இயக்கிய அரண்மனை படம் திரைக்கு வந்து வரவேற்பை பெற்றது. அதன்பிறகு அப்படத்தின் இரண்டாம், மூன்றாம் பாகங்களை இயக்கினார் சுந்தர் சி. தற்போது அவர் அரண்மனை நான்காம் பாகத்தையும் இயக்கி முடித்திருக்கிறார். சுந்தர் சி முதன்மை வேடத்தில் நடிக்க தமன்னா, ராஷி கண்ணா மற்றும் யோகி பாபு ஆகியோர் நடித்துள்ளனர்.
இப்படத்தின் படப்பிடிப்பு, தொழில்நுட்ப பணிகள் ஏற்கனவே முடிந்துவிட்ட நிலையில் ரிலீஸ் தாமதமாகி வந்தது. இந்த நிலையில் தற்போது அரண்மனை 4 படத்தை தயாரித்து உள்ள நடிகை குஷ்பு, தன்னுடைய எக்ஸ் பக்கத்தில் 2024 ஏப்ரலில் அரண்மனை 4 திரைக்கு வரும் என்று ஒரு போஸ்டருடன் அறிவித்திருக்கிறார்.
ஹரி இயக்கத்தில் விஷால் நடித்திருக்கும் ரத்னம் படம் ஏப்ரல் 26ம் தேதி திரைக்கு வருவதாக அறிவிக்கப்பட்டுள்ள நிலையில், அதற்கு முன்பேஅரண்மனை 4 திரைக்கு வரும் என்றும் கூறப்படுகிறது.