நான் கார்த்தியின் தீவிர ரசிகை : கிர்த்தி ஷெட்டி | இன்னும் 50 நாள் : பராசக்தி புதிய போஸ்டர் வெளியீடு | ஆர்யன் படம் வருகிற 28-ல் நெட்பிளிக்சில் வெளியாகிறது | ஜாய் கிறிஸ்டில்லாவுக்கு எதிராக மாதம்பட்டி ரங்கராஜ் தொடுத்த வழக்கை தள்ளுபடி செய்த நீதிமன்றம் | சிம்பு கதையில் ரஜினியா... | ஆண் பாவத்திற்கு பொல்லாதது பின் தமிழ் சினிமா நிலைமை பாவம் | அது நானில்லை : ரகுல் ப்ரீத் சிங் எச்சரிக்கை | தன் பட பூஜையை அர்ஜூன் தாஸ் புறக்கணித்தாரா? | தமிழில் மெலோடி பாடல்கள் குறைந்தது ஏன்?: கங்கை அமரன் | ஹிந்தியில் மீண்டும் தடம் பதிப்பாரா தனுஷ்? |

தெலுங்கு நடிகர் ராம்சரண் இன்று தனது 39வது பிறந்தநாளை கொண்டாடி வருகிறார். ஷங்கர் இயக்கத்தில் அவர் நடித்து வரும் ‛கேம் சேஞ்சர்' படத்தின் ஜருகண்டி என்ற பாடல் வீடியோ இன்று வெளியிடப்பட்டுள்ளது. ஷங்கரின் வழக்கமான பாணியில் பிரம்மாண்டமான செட்டுகளுடன் இந்த பாடல் கலர்புல்லாக படமாக்கப்பட்டுள்ளது. தமன் இசைஅமைத்துள்ளார்.
தனது பிறந்தநாளையொட்டி இன்றைய தினம் தனது மனைவி, மகளுடன் திருப்பதி ஏழுமலையான் கோவிலுக்கு சென்று சாமி தரிசனம் செய்திருக்கிறார் ராம்சரண். இந்த படத்தை அடுத்து புஜ்ஜி பாபு சனா இயக்கும் தனது 16வது படத்தில் நடிக்கிறார் ராம் சரண். இதில் அவருக்கு ஜோடியாக ஜான்வி கபூர் நடிக்க, சிவராஜ்குமார் வில்லனாக நடிக்கிறார். இதையடுத்து ராம்சரண் நடிக்கும் 17வது படத்தை புஷ்பா பட இயக்குனர் சுகுமார் இயக்க உள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.