டிவி நிகழ்ச்சியில் சவுந்தர்யாவை நினைத்து கண் கலங்கிய ரம்யா கிருஷ்ணன் | மீண்டும் பாலகிருஷ்ணா ஜோடியாக நயன்தாரா நடிப்பது ஏன் | ‛டூரிஸ்ட் பேமிலி' இயக்குனருக்கு பிஎம்டபுள்யூ கார் பரிசு | மாதவன், கங்கனா படத்தின் தலைப்பு என்ன தெரியுமா? | என் துயரத்தை சிலர் கொண்டாடினர் : சமந்தா | போலீஸ் வேடத்தில் சசிகுமார் | 64வது படத்தில் நடிக்க சம்பளத்தை உயர்த்தினாரா அஜித்குமார்? | தமிழ் புத்தாண்டில் சூர்யா-சிம்பு மோதிக்கொள்கிறார்களா? | 'மா இண்டி பங்காரம்' படத்திற்காக தீவிர ஒர்க் அவுட்டில் இறங்கிய சமந்தா! | விஜய் ஆண்டனியின் 'சக்தி திருமகன்' படத்தை பாராட்டிய இயக்குனர் ஷங்கர்! |

நடிகர் சிவகுமாரின் குடும்பத்தில் இருந்து அவரது மகன்களான சூர்யா, கார்த்தி இருவருமே நடிப்பில் களம் இறங்கி இன்று முன்னணி நடிகர்களாக வலம் வருகின்றனர். சிவகுமாரின் மகள் பிருந்தா ஆரம்பத்தில் சினிமாவை விட்டு ஒதுங்கி இருந்தாலும் பின்னர் தனது விருப்பமான இசை துறையில் ஒரு பாடகியாக அடி எடுத்து வைத்து மிஸ்டர் சந்திரமௌலி மற்றும் ஜோதிகா நடிப்பில் வெளியான ராட்சசி, ஜாக்பாட், பொன்மகள் வந்தாள் உள்ளிட்ட சில படங்களில் பாடியுள்ளார். ஆனால் தன்னையும் நடிப்பதற்கான வாய்ப்பு தேடி வந்து சில காரணங்களால் அதை தான் ஏற்க முடியாமல் போனது குறித்து சமீபத்திய பேட்டி ஒன்றில் கூறி ஆச்சரியம் அளித்துள்ளார் பிருந்தா.
இதுகுறித்து அவர் கூறும்போது, “முதன் முதலில் என்னை பாடுவதற்காக அழைத்தவர் இசையமைப்பாளர் கார்த்திக் ராஜா தான். ஆனால் அந்த சமயத்தில் நான் பள்ளியில் படித்துக் கொண்டிருந்ததால் அந்த வாய்ப்பை என்னால் ஏற்றுக் கொள்ள முடியவில்லை. அதேபோல இயக்குனர் மணிரத்னம் இயக்கத்தில் 'கன்னத்தில் முத்தமிட்டால்' படத்தில் சிம்ரன் கதாபாத்திரத்தில் நடிப்பதற்காக வாய்ப்பு என்னை தேடி வந்தது. இது குறித்து எங்களிடம் பேச்சுவார்த்தை நடத்துவதற்காக வந்தவர் அப்போது மணிரத்னத்திடம் உதவி இயக்குனராக பணியாற்றிய சுதா கொங்கரா தான். எனக்கு அப்போது நடிப்பில் பெரிய ஆர்வம் இல்லாததாலும் இசைத்துறையில் தான் பயணிக்க நான் விரும்பியதாலும் அது என்ன கதாபாத்திரம் என்று கூட கேட்காமல் அதை ஏற்க மறுத்து விட்டேன்.
படம் வெளியான பின்னர்தான் மூன்று குழந்தைகளுக்கு அம்மா கதாபாத்திரத்தில் நடிப்பதற்காக என்னை அழைத்து இருக்கிறார்கள் என்பது தெரிய வந்தது. என் வீட்டில் கூட இதை சொல்லி கிண்டலடிப்பார்கள். ஆனாலும் மாதவனும் சிம்ரனும் அந்த கதாபாத்திரங்களை அவ்வளவு அழகாக செய்திருந்தார்கள். சமீபத்தில் மாதவனை சந்தித்தபோது கூட, உங்களுக்கு ஜோடியாக நான் தான் நடித்திருக்க வேண்டியது.. ஆனால் நீங்கள் அந்த வாய்ப்பை மிஸ் பண்ணி விட்டீர்கள் என்று கலாட்டா செய்தேன்” என கூறியுள்ளார் பிருந்தா.