அஸ்வத் மாரிமுத்துவிற்கு விண்ணப்பித்த 15 ஆயிரம் உதவி இயக்குனர்கள்! | கவுதம் ராம் கார்த்திக் 19வது படத்தின் படப்பிடிப்பு துவங்கியது! | ''இப்போ ரிஸ்க் எடுக்கலைனா.. எப்பவும் இல்ல'': சினிமா என்ட்ரி குறித்து மனம்திறந்த காவ்யா அறிவுமணி | த்ரிவிக்ரம் இயக்கத்தில் தனுஷ்? | குட் பேட் அக்லி - முன்பதிவு நிலவரம் என்ன? | அஜித், தனுஷ் கூட்டணி அடுத்த கட்டத்திற்கு நகர்கிறது! | 'ரெட்ட தல' படத்தின் புதிய அப்டேட்! | ராஜமவுலியுடன் இணையாதது ஏன்? சிரஞ்சீவி விளக்கம் | சென்னையை விட்டு சென்றது ஏன்? சசிகுமார் விளக்கம் | தமிழிலும் வெளியாகும் 'இத்திக்கர கொம்பன்' |
வெங்கட் பிரபு இயக்கத்தில் விஜய் நடித்து வரும் ‛கோட்' படத்தின் படப்பிடிப்பு தற்போது திருவனந்தபுரத்தில் உள்ள ஒரு கிரிக்கெட் மைதானத்தில் நடைபெற்று வருகிறது. இந்த படப்பிடிப்பில் கலந்து கொள்வதற்காக நேற்று விஜய் கேரளாவிற்கு புறப்பட்டு சென்றார். அப்போது விமான நிலையத்தில் அவரை ரசிகர்கள் சூழ்ந்து கொண்டார்கள். அதன் பிறகு படப்பிடிப்பு நடைபெற்ற மைதானத்தை நோக்கி விஜய் புறப்பட்டு சென்றபோது வழி நெடுகிலும் ரசிகர்கள் ‛தலைவா தலைவா' என்றபடி அவரை பின்தொடர்ந்து வந்திருக்கிறார்கள்.
படப்பிடிப்பு நடைபெறும் இடத்தை அடைந்த விஜய், காரில் இருந்து இறங்கியபோது பெரிய அளவில் ரசிகர்கள் அவரை சூழ்ந்து கொண்டதால் தள்ளுமுள்ளு ஏற்பட்டுள்ளது. இந்த தள்ளுமுள்ளு காரணமாக விஜய்யின் கார் கண்ணாடி உடைந்து இருக்கிறது. ஒரு வழியாக விஜய்யின் பாதுகாப்பு படையினர் அவரை அங்கிருந்து மீட்டு சென்றுள்ளார்கள். இப்படி ரசிகர்கள் தனது கார் கண்ணாடியை உடைத்த போதும் அது குறித்து எந்த கோபத்தையும் வெளிப்படுத்தாத விஜய், ரசிகர்கள் என் மீது வைத்திருக்கும் அன்பு தான் இதற்கு காரணம். அவர்களின் அன்புக்கு நான் தலை வணங்குகிறேன் என்று தெரிவித்துள்ளார்.