நடிகை ஜனனி திருமண நிச்சயதார்த்தம் ; விமான பைலட்டை மணக்கிறார் | விஜய் டிவி பிரியங்கா 2வது திருமணம் : மாப்பிள்ளை யார் தெரியுமா...! | பாலோயர்ஸ்: உண்மையைப் பேசியுள்ள பூஜா ஹெக்டே | ரீ-ரிலீஸில் வரவேற்பைப் பெறுமா 'சச்சின்' | நஷ்டஈடு கேட்டு இளையராஜா நோட்டீஸ்: 'குட் பேட் அக்லி' தயாரிப்பாளர் விளக்கம் | ஓடிடி.,யிலும் தோல்வியடைந்த யுவன் ஷங்கர் ராஜா படம் | ஓடிடி-யில் வெளியாகும் வரலக்ஷ்மி சரத்குமாரின் திரில்லர் படம் | கூலி படத்தில் ரஜினி உடன் நடித்தது ஸ்பெஷலான அனுபவம் : பூஜா ஹெக்டே | அரசியலுக்கு வர வாய்ப்புள்ளதா? : ரவி மோகன் கொடுத்த பதில் | விஜய் சேதுபதி படத்தில் ராதிகா ஆப்தே? |
சென்னையில் உள்ள அண்ணா பல்கலைக்கழகத்தில் அறிவியல், தொழில்நுட்பம், பொறியியல், கணிதம் உள்ளடக்கிய உயர் கல்வி மற்றும் ஆராய்ச்சி படிப்புகளில் பெண்களை அதிக அளவில் பங்கு பெற வைக்க வேண்டும் என்பது குறித்த கருத்தரங்கு நேற்று நடைபெற்றது. இதில் நடிகர் சூர்யா கலந்து கொண்டார்.
அப்போது அவர் பேசும்போது, ‛‛பெண்களிடம் பெரிய அளவில் சக்தி உள்ளது. ஐந்து ஆண்கள் செய்யக்கூடிய வேலையை ஒரு பெண்ணால் செய்ய முடியும். குறிப்பாக ஆம்ஸ்ட்ராங் முதலில் நிலவில் கால் வைத்தாலும் அவரை அங்கு கொண்டு சேர்த்தது ஒரு பெண்தான். அக்னி மிஸைல் முதல் இஸ்ரோ வரை பெண்களின் பங்களிப்பு அதிகமாக உள்ளது.
குறிப்பாக என்னை சுற்றி இருக்கும் பெண்கள் சக்தி வாய்ந்தவர்களாக இருக்கிறார்கள். பெண்களால் முடியாதது எதுவுமில்லை. என்றாலும் பெண்கள் அங்கீகாரம் பெறுவதற்கு ஆண்களைவிட 50 சதவீதம் அதிகமாக உழைக்க வேண்டி உள்ளது. பெண்களை இன்னும் மேலே கொண்டு வருவதற்கு நாம் அனைவரும் ஒத்துழைக்க வேண்டும்'' என்று பேசி இருக்கிறார் சூர்யா.