''அப்பா ஒரு குழந்தை; ஆதாரமற்ற வதந்திகளை பரப்பாதீர்கள்'' - ஏ.ஆர்.ரஹ்மான் மகன் வேதனை | அழகுக்காக ஸ்ரீதேவி பட்ட சிரமம் : போனி கபூர் தகவல் | 'வேவ்ஸ்' ஓ.டி.டி., தளம் : பிரசார் பாரதி துவக்கம் | நவ.26ம் தேதியில் விடுதலை-2 படத்தின் இசை வெளியீட்டு விழா | தெலுங்கில் அறிமுகமாகும் மமிதா பைஜூ | திருமணத்திற்கு தயாராகும் தமன்னா | திருப்பதி கோவிலில் சாமி தரிசனம் செய்த சந்தானம் | நடிகை சீதா வீட்டில் நகை திருட்டு : போலீசில் புகார் | சமந்தா சொல்வது உண்மைதான் : அர்ஜுன் கபூர் ஒப்புதல் | சர்ச்சைகளை நீர்த்துப்போக செய்யும் விதமாக தயாராகிறதா மோகன்லால் - மம்முட்டி படம்? |
தமிழ்த் திரைப்பட இயக்குனர்கள் சங்கத்திற்கு ஆர்வி உதயகுமார் தலைமையிலான நிர்வாகிகள் பதவி ஏற்றுள்ளனர்.
தமிழ்த் திரைப்பட இயக்குனர்கள் சங்கத்தின் 2024 - 26ம் ஆண்டுக்கான தேர்தல் நேற்று சென்னை நடந்தது. ஏற்கனவே தலைவராக இருந்த ஆர்கே செல்வமணி இந்த முறை போட்டியிடப் போவதில்லை என அறிவித்துவிட்டார். தலைவர் பதவிக்கு ஆர்.வி.உதயகுமார் மனு தாக்கல் செய்தார். இவர் தவிர துணை தலைவர்கள் பதவிக்கு கேஎஸ் ரவிக்குமார், அரவிந்த் ராஜ் ஆகியோரும், பொதுச் செயலாளர் பதவிக்கு பேரரசு, பொருளாளர் பதவிக்கு சரண் ஆகியோரும் மனு தாக்கல் செய்தனர். மேலும் இணைச் செயலாளர் பதவிகளுக்கு எழில், ஏ.வெங்கடேஷ், சுந்தர் சி ஆகியோர் மனு செய்தனர். மேற்சொன்ன இந்த பதவிகளுக்கு இவர்களை தவிர வேறும் யாரும் மனு தாக்கல் செய்யாததால் இவர்கள் அனைவரும் ஒருமனதாக அந்தந்த பதவிகளுக்கு போட்டியின்றி தேர்வாகினர்.
செயற்குழு உறுப்பினர் பதவிகளுக்கு நடந்த தேர்தலில் ராஜகுமாரன், மாதேஷ், ரமேஷ் கண்ணா, மித்ரன் ஆர்.ஜவஹர், ராஜ்கபூர், பிரபு, சரவணன் சுப்பையா, ரங்கநாதன், மனோஜ்குமார் ஆகியோர் தேர்வாகினர். தேர்ந்தெடுக்கப்பட்ட நிர்வாகிகள் அனைவரும் நேற்றே பதவி ஏற்றுக் கொண்டனர்.