ரஜினியின் ‛கூலி' படத்தின் பத்து நாள் வசூல் வெளியானது! | பிளாஷ்பேக்: அபூர்வ கலைப் படைப்பாக வந்து, ஆச்சர்யமிகு வெற்றியைப் பதிவு செய்த “அஞ்சலி”யின் அனுபவ ஞாபகங்கள் | ‛பாகுபலி தி எபிக்' படம் குறித்து ராஜமவுலி வெளியிட்ட தகவல்! | சிவகார்த்திகேயனின் ‛மதராஸி' படத்தின் தியேட்டர் உரிமை குறித்த தகவல் வெளியானது! | 63வது பிறந்த நாளை கொண்டாடிய ராதிகா! | 'தலைவன் தலைவி' : 100 கோடி வசூல் என அறிவிப்பு | விஷால் 35வது படப் பெயர் 'மகுடம்' | இந்தியாவில் 400 கோடி வசூல் கடந்த 'சாயரா' | நடிகருக்கு கடிவாளம் போட்ட கேரள மனைவி | நல்ல காதல் கதை தேடும் பிருத்வி |
கடந்த 2012ல் ஜஸ்வர்யா ரஜினிகாந்த் இயக்கத்தில் நடிகர் தனுஷ் நடித்து வெளிவந்த படம் '3'. அந்த காலகட்டத்தில் இப்படம் சுமாரான வரவேற்பைப் பெற்றது. சமீபத்தில் தமிழ்நாடு, ஆந்திரா, கர்நாடகா ஆகிய மாநிலங்களில் '3' படம் ரீ-ரிலீஸ் ஆனது ரசிகர்கள் இந்த படத்திற்கு பேராதரவு தந்தனர்.
கடந்த வாரத்தில் வெளிநாடுகளிலும் 3 திரைப்படம் ரீ ரிலீஸ் ஆனது. மலேசியா, சிங்கப்பூர், பிரான்ஸ், இலங்கை போன்ற நாடுகளில் 3 படம் ரீ ரிலீஸ்க்கு ரசிகர்கள் பேராதரவு தருகின்றனர். குறிப்பாக பிரான்ஸ் நாட்டில் 3 படம் புதிய சாதனை படைத்தது. இதுவரை பிரான்ஸ் ரீ ரிலீஸ் ஆன தமிழ் படங்களில் பாபா திரைப்படம் மட்டும் 1000 டிக்கெட்டுகள் விற்பனை ஆனது .இந்த சாதனையை இப்போது 3 படம் முறியடித்து 2000க்கும் மேற்பட்ட டிக்கெட்டுகள் விற்பனை ஆனதாக படத்தை வெளியிடும் விநியோக நிறுவனம் தெரிவித்துள்ளது.