இன்னும் 50 நாள் : பராசக்தி புதிய போஸ்டர் வெளியீடு | ஆர்யன் படம் வருகிற 28-ல் நெட்பிளிக்சில் வெளியாகிறது | ஜாய் கிறிஸ்டில்லாவுக்கு எதிராக மாதம்பட்டி ரங்கராஜ் தொடுத்த வழக்கை தள்ளுபடி செய்த நீதிமன்றம் | சிம்பு கதையில் ரஜினியா... | ஆண் பாவத்திற்கு பொல்லாதது பின் தமிழ் சினிமா நிலைமை பாவம் | அது நானில்லை : ரகுல் ப்ரீத் சிங் எச்சரிக்கை | தன் பட பூஜையை அர்ஜூன் தாஸ் புறக்கணித்தாரா? | தமிழில் மெலோடி பாடல்கள் குறைந்தது ஏன்?: கங்கை அமரன் | ஹிந்தியில் மீண்டும் தடம் பதிப்பாரா தனுஷ்? | பிளாஷ்பேக்: உண்ணாவிரதம் இருந்து வெள்ளித்திரையின் உச்சம் தொட்ட பி யூ சின்னப்பா |

கீதா கோவிந்தம் படத்தின் வெற்றிக்குப் பிறகு நடிகர் விஜய் தேவரகொண்டா , இயக்குனர் பரசுராம் கூட்டணியில் உருவாகி வரும் படம் 'பேமிலி ஸ்டார்'. இதில் நடிகைகளாக மிருணாள் தாகூர், திவ்யன்ஷா கவுசிக் ஆகியோர் நடிக்கின்றனர். ஸ்ரீ வெங்கடேஸ்வரா கிரியேஷன்ஸ் நிறுவனம் தயாரிக்கும் இப்படத்திற்கு கோபி சுந்தர் இசையமைக்கிறார். காதல் கலந்த பேமிலி படமாக உருவாகிறது. கடந்த சில மாதங்களாக இதன் படப்பிடிப்பு நடந்து வந்த நிலையில் தற்போது படத்தின் மொத்த படப்பிடிப்பும் முடிவடைந்ததாக நடிகர் விஜய் தேவரகொண்டா தனது சமூக வலைதள பக்கத்தில் போட்டோ உடன் பகிர்ந்துள்ளார். ஏப்ரல் 5ம் தேதி படம் ரிலீஸாகிறது.