வார் 2 : ஹிருத்திக் ரோஷன், ஜூனியர் என்டிஆர் இடையே நடன போட்டி? | போலீஸாக நடிக்கும் கவுதம் ராம் கார்த்திக் | கண்ணப்பா படத்திற்கு அடித்த ஜாக்பாட் | அஜித் படத்தை தயாரிக்கும் அஜித் ரசிகர் | டேட்டிங் ஆப் சிக்கல்களை பேசவரும் 'நீ பாரெவர்' | மலையாள இயக்குனர் மீது பாலியல் புகார்: நடிகை கைது | புராணப்படத்தில் நடிக்கும் சமுத்திரகனி | 'ஹரிஹர வீர மல்லு': அவுரங்கசீப் கேரக்டரை மாற்றிய இயக்குனர் | பிளாஷ்பேக்: 3டி படத்தில் நடிக்க மறுத்த ரஜினிகாந்த் | பிளாஷ்பேக்: பெரும் தோல்வி அடைந்த பிரம்மாண்ட படம் |
'அப்டேட், அப்டேட்,' என்ற வார்த்தையைப் பிரபலமாக்கியவர்கள் அஜித் ரசிகர்கள். 'வலிமை' அப்டேட், 'துணிவு' அப்டேட், தல 62 அப்டேட், விடாமுயற்சி அப்டேட்' என அவர்கள் அப்டேட் கேட்காத இடங்களும், நாட்களும் இல்லை என்று சொல்லும் அளவிற்கு அப்டேட் கேட்டுக் கொண்டே இருந்தார்கள். பிரதமரின் சென்னை விஜயம், கிரிக்கெட் போட்டிகள் என அவர்கள் அப்டேட் கேட்கும் அளவிற்கு அதிர்ச்சியையும் தந்தார்கள்.
அப்படி 'அப்டேட்' கேட்கும் ரசிகர்கள், இனி அப்டேட் கேட்காத அளவிற்கு 'குட் பேட் அக்லி' பட நிறுவனம் நேற்று ஒரு 'சம்பவத்தை' செய்துவிட்டது. படத்தின் அறிவிப்பு வெளியிட்ட நாளன்றே 'பொங்கல் 2025' என பட வெளியீடு பற்றிய அப்டேட்டையும் கொடுத்துவிட்டது. ஒரு பக்கம் இது மிகவும் மகிழ்ச்சியான விஷயமாக அஜித் ரசிகர்களுக்கு இருந்தாலும், அடிக்கடி 'ரிலீஸ் அப்டேட்' கேட்க முடியாது என்ற வருத்தத்தையும் ஏற்படுத்தியுள்ளது.
இருந்தாலும் 'விடாமுயற்சி' படத்தின் அப்டேட்டை அவர்கள் 'விடாமல்' கேட்க வேண்டிய சூழல்தான் இப்போது உள்ளது. ஒரு பக்கம் இப் படத்தின் படப்பிடிப்பு தற்காலிகமாக நிறுத்தப்பட்டுள்ளது என்ற அதிர்ச்சித் தகவலும் வெளியாகியுள்ளது. இதனால்தான் இப்படம் முடியும் முன்னரே 'குட் பேட் அக்லி' பற்றிய அறிவிப்பை வெளியீட்டுத் தேதி போட்டு அஜித் வரவழைத்துவிட்டார் என்றும் கோலிவுட்டில் கிசுகிசுக்கிறார்கள்.