''அப்பா ஒரு குழந்தை; ஆதாரமற்ற வதந்திகளை பரப்பாதீர்கள்'' - ஏ.ஆர்.ரஹ்மான் மகன் வேதனை | அழகுக்காக ஸ்ரீதேவி பட்ட சிரமம் : போனி கபூர் தகவல் | 'வேவ்ஸ்' ஓ.டி.டி., தளம் : பிரசார் பாரதி துவக்கம் | நவ.26ம் தேதியில் விடுதலை-2 படத்தின் இசை வெளியீட்டு விழா | தெலுங்கில் அறிமுகமாகும் மமிதா பைஜூ | திருமணத்திற்கு தயாராகும் தமன்னா | திருப்பதி கோவிலில் சாமி தரிசனம் செய்த சந்தானம் | நடிகை சீதா வீட்டில் நகை திருட்டு : போலீசில் புகார் | சமந்தா சொல்வது உண்மைதான் : அர்ஜுன் கபூர் ஒப்புதல் | சர்ச்சைகளை நீர்த்துப்போக செய்யும் விதமாக தயாராகிறதா மோகன்லால் - மம்முட்டி படம்? |
தமிழ் இயக்குனர்கள் அவ்வப்போது ஹிந்தியிலும் சென்று 'சூப்பர் ஹிட்' கொடுத்துவிட்டு வந்துவிடுவது வழக்கம். தமிழ் இயக்குனர் ஏஆர் முருகதாஸ் இயக்கத்தில் அமீர்கான் நடிப்பில் வெளிவந்த 'கஜினி' ஹிந்திப் படம் அங்கு 100 கோடி வசூலை ஆரம்பித்து வைத்தது. அதன்பின் ஹிந்தியில் முருகதாஸ் இயக்கிய 'ஹாலிடே, அகிரா' ஆகியவை பெரிய வெற்றி பெறவில்லை. ஒரு இடைவெளிக்குப் பிறகு சல்மான்கான் நடிக்க உள்ள படத்தை முருகதாஸ் இயக்குவது குறித்த அறிவிப்பு நேற்று வெளியானது.
ஆனால், இதிலும் ஒரு சர்ச்சை எழுந்துள்ளது. தமிழ் இயக்குனரான விஷ்ணுவர்தன் இயக்கத்தில் சல்மான் நடித்து வந்த 'த புல்' ஹிந்திப் படத்தைத் தள்ளிவைத்துவிட்டு முருகதாஸ் இயக்கத்தில் சல்மான் நடிக்க இருப்பது பாலிவுட்டில் ஆச்சரியத்தை ஏற்படுத்தியுள்ளது. பிரபல இயக்குனரும், தயாரிப்பாளருமான கரண் ஜோஹர் தயாரிப்பில் உருவாகி வரும் படம்தான் 'த புல்'. இப்படம்தான் அடுத்த வருட ஈத் நாளன்று வெளியாகும் என்று சொன்னார்கள். இப்போது அதற்குப் பதிலாக முருகதாஸ், சல்மான் இணைய உள்ள படம்தான் அந்தத் தேதியில் வெளிவர உள்ளதாக அறிவித்துள்ளார்கள்.
ஒரு தமிழ் இயக்குனரைக் காத்திருக்க வைத்துவிட்டு, மற்றொரு தமிழ் இயக்குனருக்கு சல்மான் வரவேற்பு தந்துள்ளது சலசலப்பை ஏற்படுத்தியுள்ளது.
விஷ்ணுவர்தன் தமிழில் அஜித் நடித்த 'பில்லா, ஆரம்பம்' ஆர்யா நடித்த 'பட்டியல், சர்வம், யட்சன்' படங்களை இயக்கியவர். ஹிந்தியில் அவர் இயக்கி ஓடிடியில் வெளிவந்த 'ஷெர்ஷா' பெரும் வரவேற்பைப் பெற்றது. 2021ல் வெளிவந்த அப்படத்திற்குப் பிறகு 'த புல்' படத்தை இயக்கி வந்தார்.