சினிமாவில் நடிப்பது எனது தனிப்பட்ட முடிவு : குஷ்பு மகள் அவந்திகா சொல்கிறார் | பிளாஷ்பேக்: முதல் செஞ்சுரி அடித்த சிவாஜி | பிளாஷ்பேக் : ஒரே படத்துடன் காணாமல் போன நடிகை | 'ஸ்டன்ட் டிசைன்' ஆஸ்கர் விருது அறிவிப்பு: ராஜமவுலி மகிழ்ச்சி | சிகிச்சை முடிந்து வீடு திரும்பிய பவன் கல்யாண் மகன் | ஹாலிவுட் திரைப்படங்களுக்குக் கட்டுப்பாடு விதிக்கும் சீனா | 2028 முதல் ஆஸ்கர் விருதுகளில் சேர்க்கப்படும் 'ஸ்டன்ட் டிசைன்' | லோகேஷ் கனகராஜ் 'டிரெண்ட்'-ஐ தொடரும் மற்ற இயக்குனர்கள் | 22 படங்களுடன் கெத்து காட்டும் ஓடிடி தளங்கள் | குட் பேட் அக்லி - முதல் நாள் வசூல் 50 கோடி கடக்குமா? |
பாலிவுட்டின் முன்னணி நடிகர்களில் ஒருவர் ஆமீர் கான். அவரது முன்னாள் மனைவியான கிரண் ராவ் இயக்கியுள்ள இரண்டாவது படம் 'லாபட்டா லேடீஸ்'. ஆமீர்கான், கிரண் ராவ் 2005ல் திருமணம் செய்து கொண்டு 2021ல் பிரிந்தனர். அவர்களுக்கு ஆசாத் ராவ் கான் என்ற 12 வயது மகன் இருக்கிறான்.
இரண்டாவது மனைவியான கிரண் ராவைப் பிரிந்தாலும் அவர் இயக்கிய 'லாபட்டா லேடீஸ்' படத்தை கிரண் ராவுடன் இணைந்து தனது ஆமீர் கான் புரொடக்ஷன்ஸ் நிறுவனம் மூலம் தயாரித்துள்ளார்.
இப்படத்திற்கான சிறப்புக் காட்சியை சல்மான் கான் கலந்து கொண்டு பார்த்திருந்தார். அப்போது சல்மான், ஆமீர் இருவரும் பாசத்துடன் கட்டித்தழுவிக் கொண்ட வீடியோ பாலிவுட் ரசிகர்களிடம் பரபரப்பாகப் பேசப்பட்டது.
இந்நிலையில் படத்தைப் பாராட்டி, “கிரண் ராவின் 'லாபட்டா லேடீஸ்' படத்தைத் தற்போது பார்த்தேன். வாவ் வாவ்… கிரண். நானும், எனது அப்பாவும் மிகவும் ரசித்தோம். இயக்குனராக அறிமுகமானதற்கு வாழ்த்துகள், சூப்பர்.. நீங்கள் எப்போது என்னுடன் வேலை செய்வீர்கள், என்றும் கேட்டுள்ளார்.
'லாபட்டா லேடீஸ்' கிரண் ராவின் முதல் படம் இல்லை, இரண்டாவது படம். இதற்கு முன்பு 2011ல் வெளிவந்த 'தோபி காட்' என்ற படத்தை இயக்கியுள்ளார். அது தெரியாமல் அல்லது மறந்து போய் சல்மான் டுவீட் போட்டிருப்பதை ரசிகர்கள் கிண்டல் செய்து வருகிறார்கள்.